இடுகைகள்

நவம்பர் 1, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கணினியால் காலத்தை வென்றவர்…

படம்
‘நான் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் காலங்களில் தேர்வில் கோல்டுமெடல் வாங்கியதில்லை; ஆனால் கோல்டுமெடல் வாங்கிய பலபேர் எனது நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்’                                                                                                                                                                           -பில்கேட்ஸ் வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில்கேட்ஸ்) 1955ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம்தேதி அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டில் என்ற ஊரில் பிறந்தவர். இவர...

நினைவாற்றலே ஆற்றல்

படம்
  நம்முடைய கல்விமுறை அனைத்தும் மனப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டது. தான் படித்த பாடத்தை மனப்பாடம் செய்து, தன் நினைவாற்றல் மூலம், அதனைத் திறமையாக வெளிப்படுத்துகின்ற மாணவனே முதல் மதிப்பெண் பெறும் மாணவனாக மதிக்கப் பெறுகிறான். (தற்காலத்தில் மனனக் கல்வி தேவையில்லை என்கிறார்கள், ஆனாலும் அது பயனுடையதே) இந்தக் காலத்தில் பாடங்களை மனப்பாடம் செய்வது அவசியமா? என்று ஒரு கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. மனனம் செய்வதும், செய்த விஷயத்தைப் பயன்படுத்த முயல்வதும் மூளைக்குத் தரும் ஒருவகைப் பயிற்சி என்பது அறிவியலாளர் கருத்து. வினாடி வினாப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர்கள் நினைவாற்றலை அதிகம் பெற்றிருந்தாலும், அதனை விரைந்து வெளிப்படுத்தும்போதுதான் வெற்றி பெறுகிறார்கள். இதை ஒளவையார் தனது பாடலில் சொல்லுகிறபோது, “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்”… என்கிறார். இதேபோல கணக்கிடும் கருவிகளான கால்குலேட்டர், கணினி முதலியவை வருவதற்கு முன் மனக்கணக்குமுறைதான், நம்நாட்டில் வெகுகாலம் பழக்கத்தில் இருந்தது; இன்றும் இருந்து வருகிறது. கிராமங்களில் கல்வியறிவில்லாத வயதான பெண்க...

இடங்கழி நாயனார்

படம்
  “மடல் சூழ்ந் தார் நம்பி இடங்கழிக்கும் அடியேன்”                                                                                                       -திருத்தொண்டர் தொகை – சுந்தரமூர்த்தி நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய இடங்கழி நாயனார் பற்றிக்காண்போம். இவர் சோழர்குடியில் பிறந்தவர். இவர் தில்லையம்பலத்திற்குப் பொன்வேந்த சோழனாகிய ஆதித்த சோழனின் முன்னோர். கோநாட்டின் தலைநகராகிய கொடும்பா௵ரில் தங்கியிருந்து வேளிர்குலத்து அரசராக ஆட்சி புரிந்தார் வந்தார். தம் ஆட்சியில் சைவநெறி தழைக்கும் பொருட்டுத் திருக்கோயில்களில் எல்லாம் வழிபாட்டு முறையினை சீர்செய்ததோடு சிவனடியார்களுக்கு நாள்தோறும் திருவமுது (உணவு) அளிக்கும் நெறியினையும் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இவரைப்போன்றே இவர் ந...

கல்வி அழகே அழகு…

படம்
மனிதர்களை விலங்கு நிலையிலிருந்து வேறுபடுத்தி மனிதனாக, மனிதரில் சான்றோனாக, தெய்வநிலைக்கு உயர்த்துவது கல்வியே. இக்கல்வியின் அருமையையுணர்ந்த நம் முன்னோர்கள் கற்றவர்க்கு எதிலும் முதலிடம் கொடுத்தனர். திருவள்ளுவர், படிப்பதற்கான வழிகளைப் பலவகையில் நமக்குத் தந்திருக்கிறார். கற்க, கசடறக் கற்க, கற்பவை கற்க, கற்றபின் கற்க, கற்க நிற்க, கற்க அதற்குத்தக அதாவது படி, பிழையில்லாமல் படி, படிக்க வேண்டியவற்றைப் படி, படித்தபின்பும் படி, படித்தபடி நிற்பதற்காகப் படி என்பது அவர் கருத்து. சமண முனிவர்கள் தமிழுக்குச் செய்த கல்வித்தொண்டு மிக அதிகம். ‘பள்ளி’ என்கிற சொல் பௌத்த, சமண மதங்களிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுவர். அச்சமண முனிவர்கள் எழுதிய நாலடியார் என்ற நூல், கல்வியின் சிறப்புக் குறித்து, “எந்த உலகத்திலும் நாங்கள் இதுவரை, எல்லாத் துன்பங்களையும் போக்குகின்ற மருந்தாகிய கல்வியைப்போல் கண்டதில்லை என்பதை, “எம்மை உலகத்தும் யாம் காணோம் கல்விப்போல் மம்மர் அறுக்கும் மருந்து” என்றும், ‘கல்வி அழகுதான் அழகு ; ஏனைய நிலையற்றது எனவும் கூறுகின்றது. இத்தகைய கல்வியை எவ்வளவு நாள் கற்க வேண்டும் என்ற கேள்வ...