என் சீடர் அல்லர் குரு…
விநாயக் நரஹரி பாவே எனும் முழுப்பெயர் கொண்ட வினோபா பாவே ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் மண்கொடை (பூமி தானம்) இயக்கத்துக்காக மிகவும் அறியப்படுகிறார். மேலும் மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்கு கொண்டவர். காந்தியடிகளின் விருப்பத்துக்குரிய சீடராகிய இவர், காந்தியடிகள் வாழ்ந்த காலத்திலும், அவர் மறைந்தபின்னரும் அவரது கொள்கைகளை உலகெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்த உத்தமசீடர். ‘ தனது தர்மயுத்தத்தின் சேனாதிபதி வினோபா பாவே’ என்று காந்தியடிகள் பெருமிதமாகக் கூறுவாராம். ஒருமுறை வினோபா பாவே அவர்களுக்கு ஒரு கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்த வினோபாஜி அதை உடனடியாகக் கிழித்துத் தன் பையில் வைத்துக்கொண்டாராம். அருகில் இருந்தவர்களெல்லாம் அது யாருடைய கடிதம்? எங்கிருந்து வந்தது? கடித...