இவரும் எட்டயபுர பாரதிதான்…சோமசுந்தர பாரதியார்
எட்டயபுரம் தமிழுலகுக்குத் தந்த மற்றுமொரு பாரதி சோமசுந்தர பாரதி . இவர் மகாகவிபாரதிக்கு மூன்றுஆண்டுகள் மூத்தவர். சத்தியானந்த சோமசுந்தர பாரதி என்ற இவரது இயற்பெயரை ‘ ச. சோ. பாரதி’ எனத் தமிழக மக்கள் அன்போடு அழைப்பார்கள். மகாகவி பாரதியின் பால்யகால நண்பரான இவர் பாரதியோடு இணைந்து பாடல்கள் பலவற்றை இயற்றியிருக்கிறார். ஒருமுறை எட்டயபுர அரண்மனையில் வெண்பா போட்டி நடந்தது. ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச்சொன்னபோது மகாகவி பாரதியும், நம்முடைய சோமசுந்தர பாரதியும் அதில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றதால் இருவருக்கும் ‘ பாரதி’ பட்டம் வழங்கப்பெற்றது. சுப்பையாவும் (சுப்பிரமணியன்) பாரதியானார், சோமசுந்தரமும் பாரதியானார். தமிழோடு வழக்கறிஞர் பட்டமும் பெற்ற இவர், அவ்வழக்கறிஞர் தொழிலில் பெரும் பணம் சம்பாதித்தபோதிலும், அதைவிடுத்து வ.உ.சிதம்பரனாரின் ‘ இண்டியன் நேவிகே ஷ ன்’ சுதேசி கப்பல் கம்பெனியில் 100ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தார் என்பது ஓர் அரிய செய்தி. வ.உ.சி.கூட கூறுவாராம். ‘ என்னிடம் இ...