இடுகைகள்

டிசம்பர் 24, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எட்டாவது வள்ளல்… எம்.ஜி.ஆர்…

படம்
சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் இலங்கை சென்றிருந்தபோது   ‘ கண்டி’   என்ற ஊருக்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று அந்த ஓட்டுநர், ‘ஐயா அந்தப் பக்கம் கையெடுத்துக் கும்பிட்டுக்கோங்க’ என்று நெகிழ்வாகக் கூறினார். நானும் கையெடுத்து வணங்கிவிட்டு, ‘அருகில் ஏதேனும் கோவில் இருக்கிறதா?’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘இந்த ஊருக்கு அருகில்தான்   புரட்சித்தலைவர்  மக்கள்  திலகம்  திரு. எம். ஜி. ஆர்   அவர்கள் பிறந்த வீடு இருக்கிறது’ என்று சொன்னவுடன் நான் வியந்து போனேன். ஆம்,  மருதூர்  கோபால  மேனன்  ராமச்சந்திரன்  என்று அழைக்கப்படுகின்ற திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கேரளாவிலிருந்து குடும்பத்தோடு இலங்கைக்கு வேலை தேடிச்சென்றபோது அங்குதான் எம்.ஜி.ஆர் பிறந்திருக்கிறார். பின்னர் தந்தையாருடைய மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.ஆரையும், அவரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியையும் கூட்டிக்கொண்டு தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு வந்தார் எம்.ஜி.ஆரின் தாயாராகிய  சத்யபாமா  அம்மையார். அங்கு மூன்றாம் வகுப்புவரை எம்.ஜி.ஆரும் அவருடைய சகோத...

திரைவானில் ஒரு சந்திரன்… கே.பாலச்சந்தர்

படம்
தமிழ்த் திரையுலகில் புதிய மாற்றங்களை உருவாக்கிய இயக்குநர் வரிசையில்   டைரக்டர் ஸ்ரீதர்   அவர்களுக்கு எத்தனை பங்குண்டோ அத்தனை பங்கு   இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர்   அவர்களுக்கும் அவரைத் தொடர்ந்து வந்த   இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும்   உண்டு. திரு.கே.பாலச்சந்தர் அவர்கள் அரசுப்பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கியபோதும் அவரிடத்தில் இருந்த நாடகத் தாகம் அவரை நாடக உலகிற்கும் திரையுலகிற்கும் அழைத்து வந்தது. சென்னை ஏ.ஜி. அலுவலகத்தில் (அக்கவுண்டண்ட் ஜெனரல்) பணிபுரிந்தபோது உணவு இடைவேளை நேரத்தில் நாடகத்திற்கான கருவை உருவாக்கி நடிக்க விருப்பமுள்ளவர்களைத் தன் குழுவில் இணைத்துக்கொண்டு ஆங்கில நாடகங்களை, மேடை நாடகங்களாக இயக்கிக்கொண்டிருந்தார் பாலச்சந்தர். அவரது ஆற்றலைக் கேள்விப்பட்ட திரையுலகைச் சார்ந்த திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் பாலச்சந்தரை இணைத்துக்கொண்டு  எம். ஜி. ஆர்  அவர்கள்  கதாநாயகனாக நடித்த  ‘ தெய்வத்தாய்’  படத்திற்குக் கதை வசனம் எழுத வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படம் வெற்றிபெற்ற போதிலும் அதற்குப் பிறகு...

சங்க ஜனனி… சாரதா தேவி அம்மையார்

படம்
ஒருமுறை ஒருவர், குருநாதருடைய மனைவியாகிய குருபத்தினியைப் பார்த்து, ‘தாயே! ஆற்றில் பெருவெள்ளம் வரும்போது பெரியபெரியமரங்கள், யானைகள், குதிரைகள், வீடுகள் என அனைத்துப் பொருட்களையும் இழுத்து வருகின்றது. ஆனால் அதே ஆற்றில் வாழும் சிறு மீன் அத்தனை வேகம் கொண்ட அந்தத் தண்ணீரையும் எதிர்த்து செல்கிறதே, எப்படி?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டாராம். அதற்கு அந்த அம்மையாரும் புன்னகையோடு, ‘மகனே! ஆற்றுநீரில் அடித்துக்கொண்டு வரப்படும் மரங்கள், யானை, குதிரை போன்றவற்றைத் தூக்கிக் கரையில் விட்டாலும் அவை பிழைத்துக்கொள்ளும். ஆனால் மீன்கள் கரைக்கு வந்தால் சற்று நேரத்தில் துடிதுடித்து மாய்ந்து போகும். ஆறுதான் தனக்கு உயிர், வாழ்க்கை என்று அந்த மீன்கள் ஆற்றை நம்புகின்றன. தன்னையே உயிராக நம்பியிருக்கின்ற மீன்களைச் செல்லப்பிள்ளைகளாகக் கருதி, எதிர்ஏறிச் செல்ல ஆறு அனுமதிக்கிறது. இதைப்போலத்தான் இறைவனே கதியென்று இருப்பவர்களை இறைவன் எங்கும் ஏற்றிவிடுவான், உயர்த்திக்காட்டுவான், அவர்களின் உயர்வுக்குக் காரணமாவான்’ என்று சொன்னாராம் அந்த அம்மையார். அப்படிச் சொன்னவர்தான்  குருதேவர்  என்றழைக்கப்படுகின்ற  இராமகிரு ஷ் ண...

புதுவை தந்த பூபாளம்… எழுத்தாளர் பிரபஞ்சன்

படம்
தமிழில், உரைநடையும் சிறுகதையும் தோன்றியபிறகு, இதழ்களின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கின.   மணிக்கொடி,  எழுத்து,  ழா,  தீபம்   போன்ற இலக்கியஇதழ்கள்ஒருபுறமும்,   ஆனந்த  விகடன்,  கல்கி,  குமுதம்  போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகள் ஒருபுறமும், சிற்றிதழ்கள் ஒருபுறமும் சிறுகதை உலகின் வளர்ச்சிக்குப் பெரும் துணை நின்றன. எழுத்தாளர்  கல்கி,  சாண்டில்யன்,  தேவன்,  ரா. கி. ரங்கராஜன்  போன்றவர்கள் சிறுகதைகளில் தங்கள் எழுத்துத் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அதேநேரத்தில்  புதுமைப்பித்தன்,  கு. அழகிரிசாமி,  ஜெயகாந்தன்  போன்றவர்களும் தங்களுக்கெனத் தனிப்பார்வையோடும், இடதுசாரிச் சிந்தனையோடும் எளிய மக்களின் உலகத்தைத் தங்கள் எழுத்துக்களில் படைத்துக் காட்டினர். இந்நிலையில்தான்  சாவி ( சா. விஸ்வநாதன் ) போன்ற பத்திரிக்கையாளர்கள் புதிய எழுத்தாளர் பட்டாளத்தைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினர். (திரையுலகில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போல) எழுத்தாளர்  சுஜாதா,  மாலன்,  சுப்பிரமணிய...

நலம் தரும் நகைச்சுவை

படம்
வளமான வாழ்வுக்குப் பொருள் தேவை. அதுபோல, நலமான வாழ்வுக்கு நகைச்சுவை உணர்வு மிகமிகத் தேவை.                 “சிரிப்பு – அதன் சிறப்பைச்                 சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு” என்று  கலைவாணர்  என். எஸ். கிரு ஷ் ணன்  அந்தக்காலத் திரைப்படமான  ‘ ராஜாராணி’ யில்  கவிஞர்  மருதகாசியின்  பாடலில் எளிமையாகப் பாடியிருக்கிறார். ஒன்பது சுவைகளில் முதல் சுவை நகைச்சுவை  என்பது 2000ஆண்டுகளுக்கு முன்னே நம் தமிழறிஞர்கள் உலகுக்குணர்த்திய உண்மை. வள்ளுவப் பெருந்தகைகூட, சிரிப்பவர்களுக்குத்தான் உலகம், ஒளிமயமாக இருக்கிறது. அப்படி இல்லாதவர்களுக்கு அது பகலாக இருந்தாலும் இருட்டுத்தான் என்பதை,                ‘நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்                     பகலும்பாற் பட்டன்று இருள்” ...

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்

படம்
  முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்   அவர்களைச் சந்திக்கிற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபோது அவர் ஒருமுறை  சொற்பொழிவு ஆற்றுவதற்காகப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தார். அவருடைய முதிர்ந்த பருவமும், அப்போதும்கூட அவர் பேருந்தில் பயணம்செய்த அந்தத் தன்மையும், உணவு உண்ணும்போது அவர் எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கைகளும் எங்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தின. மதியஉணவு உண்ண அனைவரும் அமர்ந்திருந்தபோது அவர் எந்த உணவையும் ஏற்றுக்கொள்ளாமல் சாதத்தை மட்டும் இலையில் வைக்கச் சொன்னார். பின்னர் தன்னுடைய கைப்பெட்டியிலிருந்து பருப்புப்பொடி, சிறிய நல்லெண்ணெய் பாட்டில், மாங்காய் ஊறுகாய் இவற்றை எடுத்து மேஜையில் வைத்துக்கொண்டார். அந்தச் சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு எண்ணெய்விட்டுப் பிசைந்து சாப்பிட்டுவிட்டு, மோர் வாங்கி ஊறுகாயோடு உணவை முடித்துக்கொண்டார். அவர் உணவை உண்ட அழகும், முறையும் என் கண்முண்னே என்றும் இருக்கின்றன. பிறகு மேடைக்குச் செல்லும்முன்னர் மாணவ, மாணவிகளையெல்லாம் அழைத்து, ‘எங்கே என் கேள்விக்குப் ப...

ஹாலிவுட்டின் கனவு இயக்குநர்… ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

படம்
  நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் உலகப் புகழ்பெற்ற ஆங்கிலத் திரைப்படங்கள் மதுரையில் திரையிடப்படும்போதெல்லாம் மறக்காமல் சென்று பார்த்துவிடுவேன். (ரீகல் தியேட்டர், பரமேஸ்வரி தியேட்டர்)   டென் கமாண்மெண்ட்ஸ் (The Ten Commandments) மெக்கனாஸ் கோல்டு (Mackenna’s Gold), கிளியோபட்ரா (Cleopatra)  போன்ற  படங்களையும்,   ஜேம்ஸ்பாண்ட் படங்களையும், லாரல், ஹார்டி சார்ளி சாப்ளின்   போன்ற நகைச்சுவையாளர்களின் படங்களையும் விடாமல் தொடர்ந்து பார்த்து வருவேன். மதுரையில் ஜேம்ஸ்பாண்ட் நடிகரான   ஷான் கானரிக்கு (Sean Connery)   ரசிகர் மன்றமே உண்டு. இப்படிப்பட்ட படங்களைப் பார்த்துவிட்டுக் கடைசி இரயிலில் ஊருக்குச் சென்று அதைப் பலநாட்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி. இத்தனைக்கும் அந்தப் படங்களெல்லாம் ஆங்கிலமொழியில் பேசினாலும், எனக்கு மொழி புரியாவிட்டாலும் நான் அதை புரிந்துகொள்வேன். மற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். இப்படி இருந்தபோதுதான் மதுரை சினிப்பிரியாவில் 70mm திரையரங்கில் திரையிடப்பட்ட படம்  close  Encounters of third kind  என்னும...

தாடிக்கொம்பு சிற்பங்கள்

படம்
  தமிழகத்தின் பழம் பெருமைகளில் ஒன்று சிற்பக்கலை. தற்காலத்தில்கூட இயல், இசை, நாடகம் என்றிருந்த முத்தமிழை அறிவியல், நுண்கலை என ஐந்தமிழாகவும், மிகச் சமீப காலத்தில் கணினித் தமிழ் என்ற ஒன்றையும் இணைத்து, தமிழை ஆறு பகுப்புகளாகச் சொல்லி வருகிறார்கள். தமிழகத்தில் இத்தனைக் கோயில்கள் தேவையா எனச் சிலர் கேட்கிறார்கள். கோவிலென்பது வெறும் வழிபாட்டுத் தலம் என்று மட்டும் நினைக்கலாகாது. அக்காலங்களில் தனியாக மருத்துவமனைகள் இல்லாததால் கோவில் நந்தவனங்களில் மலர்கள், மூலிகைகள், பச்சிலைகள் முதலானவற்றைத் தரும் செடிகளைப் பயிரிட்டு அவற்றின் மூலம் மருந்துகளைத் தயாரித்து நோயுற்று நலிந்து வந்தவர்களுக்கு அரசனின் ஆணைப்படி தந்துதவியிருக்கிறார்கள். இதற்கு  ‘ ஆதூர  சாலை’  என்று பெயர். அடுத்தபடியாக உடல் குறையுற்றோர், முதியோர், வறியவர்கள் ஆகியோர்க்கு உணவைத் தானமாகக் கொடுக்கின்ற அன்னசத்திரமாகவும் கோவில்கள் விளங்கியிருக்கின்றன. மூன்றாவதாக இசை, ஓவியம், நாட்டியம், நாடகம், சிற்பம், பண்ணிசை எனப் பல்வகையான கலைகள் சிறந்து விளங்கும் இடங்களாகவும் கோவில்கள் அமைந்திருக்கின்றன. நான்காவதாக மனிதர்களை ஒழுக்க நெறியில் ...