இடுகைகள்

கு.ஞானசம்பந்தன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கும்பிடப்போன தெய்வம்…

படம்
            சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலிருந்தே இரயிலில் பஸ்ஸில், சைக்கிளில், நடந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டே பிரயாணம் செய்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் அதிகம்.                புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய உணவு வகை இவற்றால் வரும் புதிய அனுபவங்கள் இவைதான் வாழ்க்கையை எப்போதும் புதுமையாக்குகின்றன என நினைப்பவன் நான்.                எனது பல்வகை உயர்வுகளுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்  டாக்டர்  நா. ஜெயராமன்  அவர்கள் ஆவார்.                மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் என்னுடைய எம்ஃபில் பட்டத்திற்கும், பி.எச்.டி பட்டத்திற்கும் வாய்ப்புக் கொடுத்து வழிகாட்டியவர் அவர்தான். நான் மேடைப் பேச்சாளராக இன்று விளங்கக் காரணமானவரும் அவர்தான். சிறந்த நகைச்சுவையாளர், அரிய மனிதர்.     ...

மதுரைத் தலங்களும் தேவாரமும்

படம்
                           ஒருமுறை முதுகலை வகுப்பில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களுக்குப் பொருள் கூறிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.                அப்போது ஒரு மாணவர் எழுந்து ‘ஐயா, திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது ஏழாம்நூற்றாண்டு என்று கூறினீர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்ததற்கானச் சான்றாதாரங்கள் ஏதாவது உண்டா?” எனக் கேட்டார். எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.                ‘தம்பி நல்ல கேள்வி கேட்டாய். அவர் வாழ்ந்தார் என்பதற்குப் பல சான்றாதாரங்கள் உண்டு.                அவர் செய்த அருஞ்செயல்கள்                நிகழ்த்திய சாதனைகள்           ...

மீனுக்கும் ஆயுள் கம்மி…

படம்
                ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் நமக்கு வழங்கும். சிறுபிள்ளைகளாக இருக்கும்போது, எங்காவது சுற்றுலா செல்கிறோம் என்று சொன்னால் இரவெல்லாம் தூங்கமாட்டோம். பஸ்ஸிலோ, ரயிலிலோ ஜன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு ஓடிக்கொண்டிருக்கின்ற மரங்களை, எதிர்த்துச் செல்லும் வாகனங்களை, கூடவே வரும் நிலாவை, மேகத்தை ரசித்து மகிழ்வது எப்போதும் எல்லோருக்கும் பிடிக்கும்.            திருவனந்தபுரத்திலிருந்து செங்கோட்டை வரும் வழியில்  ‘ புனலூர்’  என்ற ஊருள்ளது. அந்த ஊர் தமிழ்ச்சங்கத்திற்கு ஒருமுறை நான் பேசப் போயிருந்தேன். கூட்டம் முடிந்ததும் நண்பர்கள் அந்த ஊரிலிருந்த ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். மிகப்பெரிய ஆறு. ஆற்றினையொட்டிய மலைமீது சாலை, மலைச்சரிவில் வீடுகளும் கட்டிடங்களும் அதில் அந்த உணவு விடுதி அமைந்திருந்தது.                மழை எப்போது வரும். எப்போது நிற்கும் என்று சொல்லமுடியாதபடி வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. நா...

தமிழ்வேந்தர்…துணைவேந்தர்… வ.அய்.சுப்பிரமணியம்

படம்
தஞ்சை மண்ணின் புகழுக்கு நஞ்சை வயல்கள் மட்டும் காரணமல்ல, கொஞ்சு தமிழும்தான் காரணமாக இருக்கவேண்டுமென்று அன்றைய  தமிழக  முதல்வர்  புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்.  அவர்கள் தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகத்தை 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். கரந்தைத்தமிழ்ச்சங்கத்தைஉருவாக்கிய   உமாமகேஸ்வரனார்,   வேங்கடசாமி நாட்டார்  போன்றோர்களின் கனவு தமிழுக்கெனத் தனிப்பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்பது. அக்கனவு நனவானது. இத்தகைய பெருமைமிகுந்த பல்கலைக்கழகத்திற்குத் தகுதியும், தமிழாய்ந்த பெருமகனுமாகிய ஒருவர்தான் துணைவேந்தராய் நியமிக்கப்படவேண்டுமென்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நினைத்தார். இத்தமிழ்ப் பல்லைக்கழகம் தொடங்கப்பட்டபோது புதிய வளாகத்தில் தொடங்கப்படவில்லை. சரபோஜி மன்னர்களின் அரண்மனையின் ஒரு பகுதியில்தான் பல்கலைக்கழகமும், நூலுகக் கட்டிடங்களும் இயங்கத் தொடங்கின. பல்கலைக்கழகம் கட்டுவதற்கு எவ்வளவு இடம் வேண்டுமென எம்.ஜி.ஆர் அவர்கள் அதிகாரிகளை அழைத்துக் கேட்டபோது அவர்கள் நூறு ஏக்கர் இடம் வேண்டும் என்று கேட்டதாகவும், எம்.ஜி.ஆர் அவர்கள...

நாட்டுக்கு உழைப்போம்…

படம்
            தம்பி நீ காலை எத்தனை மணிக்கு எழப்போகிறாய்?’ அவனுடைய சகோதரி ஒருநாள் இரவு கேட்டாள்.                ‘எப்போதும்போல ஆறு மணிக்கு…. ஏன்?’ என்றான் தம்பி.                ‘எழுந்து?’                ‘இதென்ன கேள்வி நிலக்கடலை விவசாயம் இருக்கிறது…. வியாபாரம் இருக்கிறது இரண்டையும் கவனிப்பேன்’.                ‘சரி, நீ  தினமும் காலையில் ஆறுமணிக்கு எழுந்தால் கடலை வியாபாரி. 4மணிக்கு அதாவது இரண்டு மணிநேரம் முன்னதாக எழுந்தால் ஜனாதிபதியாகக்கூட ஆகலாம். முயற்சி செய்’ என்றாள் சகோதரி.                தன் மனதில், எப்போதும் இருக்கும் ஜனாதிபதி எண்ணத்திற்கு வண்ணம் பூசியது அந்த வார்த்தைகளே! பிறகு அந்தச் சிறுவன் ஒருபோதும் ஆறுமணிவர...

முத்தமிழ் வித்தகர்… கொத்தமங்கலம் சுப்பு

படம்
தமிழ்த்திரையுலகில் நடிகராகக், கவிஞராக, எழுத்தாளராக, ‘ஒளவையார்’ என்ற படத்தை இயக்கிய பெருமையுடையவராகத் திகழ்ந்தவர்தான் பல்துறைக் கலைஞரான  கொத்தமங்கலம்  சுப்பு  அவர்கள்.  தில்லானா  மோகனாம்பாள்,  ராவ்  பகதுர்  சிங்காரம்,  பந்தநல்லூர்  பாமா,  போன்ற புதினங்களை ‘ஆனந்தவிகடன்’ வார இதழில் எழுதியவர். மிகச்சிறந்த கவிஞர், மிகச்சிறந்த நகைச்சுவையாளர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கான சான்றினை ஒரு பதச்சோறாகக் காண்போம்… கிராமத்தில் நிலத்தை உழுதுகொண்டிருக்கின்ற விவசாயிக்கு அவன் மனைவி கஞ்சி கொண்டு செல்கிறாள். உழுது முடித்து வந்தவன் கலையத்திலிருக்கும் கஞ்சியை ஒரு வாய் குடிக்கிறான். உடனே அவன் மனைவி, ‘மச்சான் கொஞ்சம் இரு’ என்று சொல்லிவிட்டு, தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த உப்பினை அந்தக் கஞ்சியில் போட்டுக் கரைத்து அவனுக்குக் கொடுக்கிறாள். அந்தக் கஞ்சியை ரசித்து, ருசித்துக் குடித்த அந்த விவசாயி, ‘ஆஹா! இந்தக் கஞ்சியில் போட்டு ருசியோடு குடிப்பதற்காகத்தான் கடலிலே உப்பை இந்தக் கடவுள் உருவாக்கித் தந்திருக்கிறான்’ என்று சொல்லிவிட்டு அதைப் பாட்டாகப் பா...

குருவே வழிகாட்டி…. வாழ்வின் ஒளிகாட்டி…

படம்
                    கற்றது  கைம்மண்  அளவு…..  கல்லாதது  உலகளவு…’                இது பழங்காலத்தில் நம்முடைய ஒளவைப் பாட்டி சொன்ன வார்த்தை.                ‘அப்ப எவ்வளவு நாள் படிக்கிறது?’                ‘இதுல சந்தேகம் என்ன?’                ‘அதுக்கப்புறம் படிக்க வேண்டாமா?’                இப்படிப் பலபேர் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம் பெருமையாகச் சொன்னார். ‘எம் பையன் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்!’                ‘அடடே அப்படியா? அப்புறம் என்ன செய்யப்...

மனிதக் கணினி செய்குத்தம்பி பாவலர்…

படம்
'அவதானம்’  என்பது ஒரே நேரத்தில் பல செயல்களை  ‘ அவதானித்தல்’  எனப் பொருள்படும். எட்டுவேலைகளை ஒரே நேரத்தில் செய்கின்ற ஆற்றலுடையவரை  ‘ அ ஷ் டாவதானி’  என்றும், பத்து வேலைகளைச் செய்பவரை  ‘ தசாவதானி’  என்றும், பதினாறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவரை  ‘ சோட ஷ   அவதானி’  என்றும் அழைப்பது வழக்கம். இந்த  ‘ அவதானி’  என்ற வடசொல்லுக்குத் தமிழில்  ‘ கவனகர்’  என்று பொருள். இதேபோல, நூறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவர்களை  ‘ சதாவதானி’  என அழைப்பார்கள். அத்தகைய சதாவதானிகளில் ஒருவர்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  சதாவதானி  செய்குத்தம்பி  பாவலர் . இவர் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலைப் பெற்றதோடு ஏக சந்தக் கிராதியாகவும் திகழ்ந்தார்.  ‘ ஏக  சந்தக்  கிராதி’  என்ற வடசொல்லுக்குப் பொருள் ஒருமுறை ஒரு சொல்லைச் சொன்னால் அதனை அப்படியே உள்வாங்கிக்கொண்டு திரும்பச் சொல்லுகிற திறமை. அத்திறமை உள்ளவர்களை  ‘ ஏக  சந்தக்  கிராதி’  என அழைப்பது வழக்கம். சதாவதானி செய்குத்தம்பி பா...

குரங்கும்… குழந்தையும்…

படம்
                    ஒரு ஊருக்கு ராமாயணக் கதையைக்  ‘ கதா  காலட்சேபம்’  செய்ய ஒரு முதியவர் வந்திருந்தார்.        ஊர்ப்பெரியவர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தார்கள். கதை சொல்பவர் ஆர்வத்தோடு கேட்டார். ‘பெரியோர்களே, இராமனின் கதையை, ராமாயணத்தை உங்கள் ஊரில் காலட்சேபம் செய்ய வந்துள்ளேன்…. சம்மதம்தானே!’                ‘சந்தோஷம்…. சம்மதம்…’ என்றார்கள் ஊர்ப்பெரியவர்கள்.                ‘ஒருமாதம் முழுவதும் சொல்லட்டுமா?’                ‘ஒரு மாதமா…’இழுத்தபடி கேட்டார்கள் ஊரார்.                ‘சரி 15 நாட்கள் கதை சொல்லவா?’               ...

என் வழி தனி வழி….

படம்
        நம் நாட்டில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எதனையும் ஆச்சரியத்தோடு பார்ப்பது. நம்புவது, அதனை மற்றவர் ஆச்சரியப்படும்படி சொல்வது. நான் சொல்வதுகூட உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.     ஒருவர் சோதிடம் பார்க்க விரும்பினார். தன் குடும்ப ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடரிடம் சென்றார். சோதிடரிடம் கொடுத்துவிட்டு முன்னால் அமர்ந்தார்.                சோதிடர் ஆரம்பித்தார். ‘உங்கள் வீட்டு எண் 7ஆம் நம்பரா?’                வந்தவர் ஆச்சரியத்தோடு “ஆமாம் ஐயா”                ‘கூடப்பிறந்தவர்கள் 5 பேர். பெண் 2, ஆண் 3, மூத்தவன் பெயர் மாணிக்கம். கடைசிப்பெண் பெயர் சீதாலட்சுமி….’ கடகடவென சொல்லிக்கொண்டே போனார்.                ‘சாமி நீங்க தெய்வந்தான் எப்படி இவ்வளவு துல்லியாமாச் சொல்றீங்க?’     ...