இடுகைகள்

ஏப்ரல் 22, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனையோலைகளும்… புதிய வலைதளங்களும்…

படம்
      உலகப் புத்தகத் திருநாள் மனித வர்க்கத்தின் அறிவுத்திருநாள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு புத்தக நூல்நிலையமும், அறிவுத் திருக்கோயில்கள்தாம்.                மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்தான் என்கின்றார் ஒரு மேல்நாட்டு அறிஞர். இத்தகைய புத்தகங்கள் ஒருகாலத்தில் ஓலைகளில் எழுதப்பட்டு வந்தன. அந்த ஓலைகளைத் தமிழ் கற்ற சான்றோர்களும், ஆன்மீகத் திருமடங்களும் பேணிப் பாதுகாத்து வந்தன.                புலவர்களும், எழுத்தாணி கொண்டு பனைஓலைகளில் எழுதும் பயிற்சி உடையவர்களும் இருந்ததால் இப்பனைஓலைகள் காலங்காலமாய் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அதுவும் அந்தக்காலங்களில் புள்ளி எழுத்துக்கள் கிடையாது. நெடில் குறில் வேறுபாடுகளைப் பிரித்தறிவது கடினமாக இருந்தது. வீரமாமுனிவர் போன்ற மேல்நாட்டு கிறித்தவப் பாதிரிமார்கள் தமிழ்கற்று எழுத்துச் சீர்திருத்தம் செய்து  ‘ சதுரகராதி’  எனும் அகராதியை உருவாக்கித் தம...