கே.எம்.முன்ஷியின் ஜெய் சோம்நாத்….
இந்தியா ஒரு பண்டைய தேசம் என்பதும், அறிஞர்களும் ஞானிகளும் நிறைந்த தேசம் இதுவென்பதும் உலகோர் ஏற்றுக்கொண்ட உண்மை. இதை மகாகவி பாரதி தன்னுடைய பாடலிலே சொல்லும்போது ஞானத்திலே பர மோனத்திலே – உயர் மானத்திலே அன்ன தானத்திலே கானத்திலே அமுதாக நிறைந்த கவிதையிலே உயர்நாடு……… என்று கூறுவார். தென்னாடாகிய தமிழகத்திற்கு மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறு உண்டு. இதேபோன்று வடஇந்தியாவிலும் வேதகால நாகரீகம் தொடங்கி, இதிகாசங்களைத் தோ ற்றுவித்த வால்மீகி, வியாசர், காளிதாசர், பாரவி போன்ற படைப்பாளப் பெருமக்களை கொண்ட வரலாறு அங்கும் உண்டு. இன்றைக்கும்கூட வி. ச. காண்டேகரை, சரத்ச...