வரலாற்றை நேசிப்போம்…
தமிழ்நாட்டில் ‘வரலாறு’ என்ற சொல் பல்வேறு வகையான பொருள்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘வரலாற்று நாயகனே வருக’ ‘வாழுகின்ற வரலாறே வருக’ என்று தங்கள் தலைவர்களுக்காகத் தொண்டர்கள் புதிய முழக்கங்களை வெளியிடுகிறார்கள். கிராமங்களிலோ ‘அவன் வாழ்ந்த வாழ்க்கை, அவன் வரலாறு எங்களுக்குத் தெரியாதா’ என்ற நலிந்து போனவர்களைப் பற்றி பேசிக்கொண்டு திரிகிறார்கள். வகுப்பறைகளிலோ ‘ஹிஸ்ட்ரி’ வாத்தியாரும் போரு, ஹிஸ்ட்ரி பாடமும் அக்கப்போரு, ஏன்னா அதுல எப்பப் பாத்தாலும் போருபோருன்னு வருது’ என்று மாணவர்கள் சலித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ, ‘நடந்தவைகளைப் பற்றியும், இறந்தவர்களைக் குறித்தும் படிப்பதனால் எதிர்காலத்திற்கு என்ன பயன்? எல்லாரையுமே கம்ப்யூட்டர் படிக்க வைங்க, பில்கேட்ஸ் வேலை கொடுப்பான்’ என்று கம்ப்யூட்டரின் வரலாறு தெரியாம...