திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள்
இந்தியத் திரைப்பட வரலாற்றில் தமிழ்த் திரையுலகிற்கு ஒரு தனியிடம் உண்டு. அமெரிக்காவில் ஹாலிவுட் , பம்பாயில் பாலிவுட், தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தை கோலிவுட் என்று வேடிக்கையாகப் பத்திரிக்கையாளர்கள் குறிப்பிடுவது உண்டு. 1931இல் தமிழ் சினிமா பேசவும், பாடவும் தொடங்கியது. அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் இத்திரையுலகில் புகழும், பணமும், பதவியும் பெற்று உயர்ந்தோர் பலர். அதைப்போலத் தங்கள் நடிப்பால் இசையால், கவிதைகளால் தமிழ்த்திரைக்குப் பெரும்புகழை உலக அரங்கில் எடுத்துச் சொல்லுமளவிற்குப் பெருமை சேர்த்தவர்களும் உண்டு. இத்தகு புகழ்மிக்க தமிழ்த் திரைப்பட உலகில் காலம்காலமாகத் தங்களது நகைச்சுவை நடிப்பால் வாழ்ந்த காலத்திலும், மறைந்தபோதிலும் மக்களை மகிழ்வித்து, தற்போதும் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்ற நகைச்சுவை நடிகர்கள் ஒரு தனியிடத்தைப் பெறுகிறார்கள். திரு. கா...