இடுகைகள்

டிசம்பர் 23, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கந்தசஷ்டியும்… சூர சம்ஹாரமும்…

படம்
தமிழ்க்கடவுளாகிய முருகன் சங்கஇலக்கியங்களில் பெரிதும் போற்றப்படுகின்ற பழைமையான கடவுள். சங்கஇலக்கியமாகிய   பத்துப்பாட்டில்  முதலாவதாக உள்ள   நக்கீரர்   பாடிய   திருமுருகாற்றுப்படை  முருகப்பெருமானுடைய ஆறுபடை வீடுகளினுடைய பெருமையைக் கூறுகின்ற நெடும்பாட்டு. இதேபோல,   எட்டுத்தொகை   நூல்களுள்   பரிபாடலிலும்  முருகப்பெருமான் பெருமை எடுத்துரைக்கப்படுகின்றது. இம்முருகப்பெருமான் வேலினை உடைய வீரனாக, பாலமுருகன், வீரமுருகன், ஞானமுருகன் என்று அனைவராலும் போற்றி வணங்கப்படுகின்றார். ஐப்பசி மாதத்தில் அமாவாசை அடுத்த வளர்பிறை நாளில் முருகனைவேண்டிப் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர். இது  ‘ ச ஷ் டி’  என்று அழைக்கப்படுகின்றது. குறிப்பாகக் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பார்கள். ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’- இது பழமொழி. இந்தப் பழமொழியினுடைய பொருள் சமைக்கின்ற மண்சட்டிகளில் உணவோ, காய்கறிகளோ இருந்தால்தான் அது அகப்பையாகிய கரண்டியில் எடுத்தால் வரும். இது வெளிப்படையான பொருள். இதையே பக்திப்பூர்வமாகப் பார்ப்போமேயானால் திருமணமான...

தன்னம்பிக்கை

படம்
    “வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்      மற்றைய எல்லாம் பிற”    “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்       திண்ணிய ராகப் பெறின்” இதுபோன்ற குறட்பாக்களைத் திருக்குறளில் படிக்கும்பொழுதும், வகுப்பறையில் பாடமாக நடத்தும்பொழுதும், மேடைகளில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பேசும்போதும் ஒரு சிந்தனை ஏற்படும். 1800 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட இக்குறட்பாக்களின் மன எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் பற்றி வள்ளுவர் சிந்தித்திருப்பது பெருவியப்பைத் தருகிறது.  காரணம் தற்காலத்தில் ‘எண்ணங்களால் உயர்வது எப்படி?’ தலைவனாவது எப்படி?, தனித்தன்மையை வளர்ப்பது எப்படி? என்று தனித்தனியே புத்தகம் எழுதிக்கொண்டும், வகுப்புகள் நடத்திக்கொண்டும், மனஊக்கத்தை உண்டாக்கப் பலர் முயல்வதைக் காண்கிறோம்.  ஆனால் திருவள்ளுவர் எவ்வளவு எளிமையாகக் கூறுகிறார். வினை விதி எல்லாவற்றையும் நிர்ணயிப்பது ஒரு மனிதனின் மன உறுதியே தவிர மற்றைய எல்லாம் அதற்குப் பிறகுதான் எனவும், நினைத்ததை நினைத்தபடி முடிக்கும் ஆற்றல், வலிமையான எண்ணங்களைக் கொண்டவர்களுக்கு வாய்க்கப்பெறும் என்பதை இத...

தசாவதானி… கமல்…

படம்
“மூன்றாம் பிறை”   படம் முடிந்து நண்பர்களோடு வெளியே வந்தபோது,  ‘கமலஹாசன்’  போன்ற அற்புதமான கலைஞர்கள் வாழுகின்ற காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பதை எண்ணும்போது பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறதென்று நான் என் நண்பர்களிடத்திலே சொன்னேன். அவர்களும் ‘ஆமாம்’ என்று உற்சாகமாக என் கருத்தை ஆமோதித்து வரவேற்றார்கள். அப்போது நான் மதுரை  தியாகராசர் கல்லூரியில்  எம்.ஏ., படித்துக்  கொண்டிருந்தேன் (1982). குழந்தை நட்சத்திரமாக ‘ களத்தூர் கண்ணம்மாவில் ’ அறிமுகமாகிப் ‘ பாதக்காணிக்கை’ ‘பார்த்தால் பசி தீரும்’ ‘வானம்பாடி’ ‘ஆனந்தஜோதி’  எனப் பல்வேறு படங்களில் துறுதுறுப்பான சிறுவனாகக் காண்போர் இதயத்தை ஈர்த்தவர்  குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசன்.  எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன், சந்திரபாபு, தங்கவேலு  என்று பல்வேறு கலைஞர்களோடு இணைந்து நடிக்கும் அரியவாய்ப்பு அவருக்கு அப்போதே கிடைத்திருந்தது. சிறுவயதில் டூரிங் டாக்கீஸ்களில் மணல் தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு  ‘பாதாள பைரவி’  படத்து  ரங்காராவையும், ‘மதுரை வீரன்’எம்.ஜி.ஆரை யும் பார்த்து, பயந்...

சுனாமி – ஆழிப்பேரலை

படம்
உலகம் தோன்றிய நாள் முதலாக மனிதஇனத்திற்குக் கடலைக் காண்கிறபோதெல்லாம் மனதில் ஆனந்தமும், அச்சமும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனந்தத்திற்கான காரணம், முதல் உயிரினம் தோன்றியது (அமீபா என்ற ஒரு செல் பிராணி) கடலில்தான். எனவே பிறந்தவீட்டைப் பார்ப்பதுபோல மனதில் ஆனந்தம். அச்சத்திற்கான காரணம் கடல் கரைகள் அற்றது. எந்தநேரமும் பொங்கி எழலாம் என்கிற எண்ணம்தான்.   ‘ நீர்  மிகின்  சிறையும்  இல்லை’   என்கிறது ஒரு சங்கப்பாட்டு. தரையில் இருக்கின்ற உயிரினங்களைப்போலவே ஆழ்கடலிலும் நுண்ணுயிர் தொடங்கி,  மீன்,  ஆமை,  கடல்பசு,  கடற்குதிரை,  கடல்பாம்பு , மற்றும் யானையைக் காட்டிலும் பெரிய உயிரினமான  திமிங்கலமும்  கடலில்தான் உள்ளன.  இக்கடலில் மீன்கள் மட்டுமல்லாமல்  முத்துக்கள்,  பவளப்பாறைகள்  போன்ற இயற்கைவளங்களும் நிறைந்து காணப்படுகின்றன. உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கக் கண்டங்கள் ஒன்றாக இருந்து பின்னர் காலப்போக்கில் பிரிந்திருக்கலாம் என  ‘ இடம்பெயரும்  கண்டங்கள்’  என்ற நூல் குறிப்பிடுகிற...

மழைக்காலமும் மத்தாப்புகளும்…

படம்
“ஐப்பசி அடைமழைக்காலம்”   அப்டீன்னு அந்தக்காலத்துல பெரியவுங்க  சொல்லுவாங்க. 15 நாள் விடாம ஐப்பசிமாசத்துல மழைபெஞ்சதெல்லாம் நான் கண்ணார பார்த்துருக்கிறேன்’ அப்படீன்னு அந்தத் திண்ணையில உட்கார்ந்திருந்த 98வயசு தாத்தா கண்ணாடி போடாமலேயே கண்கள் பளபளக்கச் சொன்னார். ‘ அந்தத் தீபாவளிதான் எங்களுக்குத் தலைதீபாவளி. இடுப்புத் தண்ணியில  இவரு கையைப்பிடிச்சுக்கிட்டு ஆத்துக்குள்ள நடந்துபோயி எங்க அப்பா வீட்ட அடஞ்சப்ப எங்கத் தெருவே சந்தோசப்பட்டுச்சு ’ என்று தன்னுடைய 95 வயதிலும் நாணம் முகத்தில் படர அந்தப் பாட்டி சொன்னபோது கேட்டுக்கொண்டிருந்த பேரன், பேத்திகள் எல்லோரும் கைதட்டினார்கள். ‘அப்படீன்னா அன்னிக்கு நீங்க வெடி விடலையா? ’ என்று வீடியோ கேம்ஸில் விளையாடிக்கொண்டிருந்து கொள்ளுப்பேரன் கேள்வி கேட்க, ‘ விட்டாரு… விட்டாரு… ஓலவெடி விடுறதுக்குள்ள ஊரையே கூட்டிட்டாரு, அப்புறம் நான்தான் யானைவெடியை கையில பிடிச்சு அப்படியே தூக்கிப்போட்டேன் ’ என்று பாட்டி வீரமாகச் சொல்ல,  அப்ப நீ யானை மாதிரி இருந்த, அதனால யானை வெடி விட்ட, நான் ஊசிபட்டாசு மாதிரி இருந்தேன், அதனாலதான் ஓலவெடி விட பயந்தேன், ஏன்னா நான் ஒன...

தமிழில். . . அறிவியல். . .

படம்
உலகிலுள்ள மொழிகளைப் பற்றி மொழிநூல் அறிஞர்கள் கூறும்பொழுது,  ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு எனக் குறிப்பிடுவர். ஆங்கிலமொழியை  ‘அரசாங்க மொழி’  என்றும், பிரெஞ்ச் மொழியை  ‘இசைமொழி’  என்றும், உருதுமொழியைக்  ‘கவிதைமொழி ’ என்றும் கூறுவது வழக்கம். அதுபோல இந்தியமொழிகளில் வங்கமொழியைக்  கவிதைமொழி  என்று கூறும்போது, பழைமைச் சிறப்பும் புதுமைப்பொலிவோடும் விளங்குகின்ற தமிழ்மொழியை  பக்திமொழி  என்று குறிப்பிடுவர். அதனால்தான் ஜி.யு.போப் என்ற மேல்நாட்டு அறிஞர் திருவாசகத்தை மொழிபெயர்த்து அதனுடைய பக்திஉணர்வில் ஈடுபட்டுத் தன்னை ஒரு  ‘தமிழ் மாணவன்’ என்று அறிவிக்குமாறு வேண்டினார். இரண்டாயிரம் ஆண்டுப் பழைமையுடைய தமிழ் இலக்கிய வரலாற்றில்  7ஆம் நூற்றாண்டு தொடங்கி 18ஆம் நூற்றாண்டுவரை நமக்குக் கிடைத்திருக்கிற இலக்கியங்களில்,  தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்  போன்ற பக்தி இலக்கியங்களே மிகுதியும் இடம் பெறுகின்றன. இத்தகைய  தமிழ்மொழியில் அறிவியல் செய்திகள்  எனப் பார்க்கும்போது தனியாக அறிவியலுக்கென ஒரு பகுதியைப் பற்றி...

உயர்தனிச் செம்மொழி

படம்
  “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்றும், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” எனவும் பாடுகின்ற  பாரதி , தமிழ்மொழி தவிர சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம்,  பிரெஞ்ச் எனப் பல மொழிகளையும் கற்றுணர்ந்தவர். இத்தகைய பன்மொழி  அறிவை உடைய பாரதி, தமிழ்மொழியின் பெருமையை உலகமொழிகளுக்கு ஈடாக, அதற்கும் மேலாகவும் கூறுவதைக் காண்கிறோம். உயர்தனிச் செம்மொழி என்ற தமிழ்ச்சொல்லை உலகுக்கு அறிவித்தவர்,  சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற் கலைஞர் ஆவார். இவர்  நூறாண்டுகளுக்கு முன்பாகவே, தாம் வாழ்ந்த காலத்திலேயே செம்மொழி எனத் தமிழின் உயர்வினை உலகுக்கு அறிவித்தவர். 2004ஆம்ஆண்டு நம் இந்திய அரசாங்கம், இந்திய மொழிகளில் ஒன்றாகிய  நம் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. தொல்காப்பியம் தொடங்கி மூவாயிரம் ஆண்டுப் பழைமை உடையது நம்மொழி. இத்தமிழ்மொழி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்பட்டாலும், கால வெள்ளத்தை எதிர்த்து இந்த விஞ்ஞான யுகத்திற்கு ஈடுகொடுத்துப் புகழோடு விளங்குவது பெருமைக்குரிய ஒன்றா...

குருவும் சீடனும்…

படம்
மாதா, பிதா, குரு, தெய் வம் என வரிசைப்படுத்தும்போது, தெய்வத்துக்கு மிக  அருகிலிருப்பவர் குருநாதர்தான். குழந்தை முதலில் அறியும் முகம் தாய் முகம். தாய், தந்தையை அறிமுகம்  செய்கிறாள். தந்தை ஞானத்தையும், கல்வியையும் தன் குழந்தை அறியும்  பொருட்டுக், குருவிடம் அழைத்துச் செல்கிறார். குரு என்கிற ஆசிரியர் அறியாமை இருளைப்போக்கி, ஞானதீபத்தை ஏற்றிக் கல்வியைக் கற்றுத் தந்து, தெய்வத்தைக் காட்டுகிறார். நல்ல குரு கிடைப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நல்ல  சீடன் கிடைப்பதும்தான். ஆன்மீகத்தில்…  இராமகிருஷ்ண பரமஹம்சர் – விவேகானந்தர் அரசியல் உலகில்  தந்தை பெரியார்… பேரறிஞர் அண்ணா, தீரர் சத்திய மூர்த்தி – கர்மவீரர் காமராசர். தமிழ் இலக்கிய உலகில்  மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை – உ.வே.சாமிநாத அய்யர். இசை உலகில்… மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் மகாராஜபுரம் சந்தானம். நாடக உலகில்…  சங்கரதாஸ் சுவாமிகள் – டி.கே.சண்முகம் நடிப்பு உலகில்…  பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் – பத்மஸ்ரீ கமல்ஹாசன் எனக் குறிப்பிடலாம். இராமகிருஷ்ண பரமஹம்சர்  தம் வாழ்நாளில் பணம...

காட்டில் அதிசயங்கள்

படம்
உலக அதிசயங்கள் எத்தனை என்று கேட்டால் உடனே  ‘எட்டு’   என்று  சொல்லி அவற்றை  தாஜ்மஹால், பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம்  என்று  வரிசைப்படுத்திக் கூறத் தொடங்குவோம். இவை தவிர நம்நாட்டிலே,  ஊருக்குள்ளே நம்மைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்ற  அதிசயங்களை நாம் எண்ணிப் பார்த்ததுண்டா? பிலோ இருதயநாத்  என்கின்ற ஓர் எழுத்தாளரை அந்தக் காலத்து  வாசிப்பாளர்கள் அறிந்திருப்பார்கள். அஞ்சல் அலுவலகத்தில் வேலை பார்த்த இவர், தன் சொந்தச் செலவில் சுயமுயற்சியால் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களுடைய பழக்கவழக்கங்களை, நம்பிக்கைகளை அங்கேயே சென்று அவர்களோடு தங்கி அதனை கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர் போன்ற பத்திரிக்கைகளில் எழுதி பதிவு செய்தார். சுற்றுப்புறச் சூழல், மானுடவியல் என்று, இன்று பலதுறைகள் வளர்ந்திருந்தாலும் தம் எழுத்தில் இவற்றைத் தொடங்கி வைத்தவர்  பிலோ  இருதயநாத்  எனச் சொல்லலாம். பயண வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் சுமையேற்றி வரும் லாரிகளில், மாட்டு வண்டிகளில், மட்டக் குதிரைகளில் பயணம்செய்து சில நேரங்கள...