சங்க ஜனனி… சாரதா தேவி அம்மையார்
ஒருமுறை ஒருவர், குருநாதருடைய மனைவியாகிய குருபத்தினியைப் பார்த்து, ‘தாயே! ஆற்றில் பெருவெள்ளம் வரும்போது பெரியபெரியமரங்கள், யானைகள், குதிரைகள், வீடுகள் என அனைத்துப் பொருட்களையும் இழுத்து வருகின்றது. ஆனால் அதே ஆற்றில் வாழும் சிறு மீன் அத்தனை வேகம் கொண்ட அந்தத் தண்ணீரையும் எதிர்த்து செல்கிறதே, எப்படி?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டாராம். அதற்கு அந்த அம்மையாரும் புன்னகையோடு, ‘மகனே! ஆற்றுநீரில் அடித்துக்கொண்டு வரப்படும் மரங்கள், யானை, குதிரை போன்றவற்றைத் தூக்கிக் கரையில் விட்டாலும் அவை பிழைத்துக்கொள்ளும். ஆனால் மீன்கள் கரைக்கு வந்தால் சற்று நேரத்தில் துடிதுடித்து மாய்ந்து போகும். ஆறுதான் தனக்கு உயிர், வாழ்க்கை என்று அந்த மீன்கள் ஆற்றை நம்புகின்றன. தன்னையே உயிராக நம்பியிருக்கின்ற மீன்களைச் செல்லப்பிள்ளைகளாகக் கருதி, எதிர்ஏறிச் செல்ல ஆறு அனுமதிக்கிறது. இதைப்போலத்தான் இறைவனே கதியென்று இருப்பவர்களை இறைவன் எங்கும் ஏற்றிவிடுவான், உயர்த்திக்காட்டுவான், அவர்களின் உயர்வுக்குக் காரணமாவான்’ என்று சொன்னாராம் அந்த அம்மையார். அப்படிச் சொன்னவர்தான் குருதேவர் என்றழைக்கப்படுகின்ற இராமகிரு ஷ் ண...