இடுகைகள்

M.Arunachalam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கர்நாடக இசை என்பது தமிழிசைதான்… மு.அருணாசலம்..

படம்
தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர்   மு. அருணாசலம்   அவர்கள். இவர்,  நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்.   தமிழிசை  இலக்கிய  வரலாறு,  தமிழிசை  இலக்கண  வரலாறு     ஆகியவற்றையும் எழுதியுள்ளார். மு.அருணாசலம் அவர்கள் நாகை மாவட்டத்திலுள்ள (முன்பு தஞ்சை மாவட்டம்) திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிறந்தார். அறிஞர்மு.அருணாசலம்அவர்கள்  ஒன்பதாம்  நூற்றாண்டு  தொடங்கிப்  பதினேழாம்  நூற்றாண்டு  வரையிலான  தமிழ்  இலக்கிய  வரலாற்றை 15  நூல்களில்  பல  அரிய  தகவல்களோடு  பதிவு  செய்துள்ளார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் புலமைபெற்ற அருணாசலம் அவர்கள் இலக்கிய, இலக்கணத் தத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் கல்வெட்டுகளைப் படிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். இவர் பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்றுக் கொண்...