வை.மு.கோதைநாயகி அம்மாள்
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் ஒருமுறை பேசுவதற்கு நான் சென்றிருந்தேன். பாரதியாரைப் பற்றி நான் பேசிக்கொண்டு வரும்போது அவர் பெண்களுக்காக நடத்திய ‘ சக்கரவர்த்தினி’ எனும் பத்திரிக்கையைக் குறித்துப் பேசினேன். அப்பத்திரிக்கையில் பாரதியின் துணைவியாராகிய திருமதி. செல்லம்மா பாரதி அவர்கள் எழுதிய ‘ பாபநாசம்’ பயணக்கட்டுரைக் குறித்தும் எடுத்துரைத்தேன். பின்னர் ‘இதே தெருவில் வசித்து வந்த வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களைப் பற்றி நான் உங்களுக்குச் சில செய்திகளை தெரிவிக்கிறேன்’ என்று சொல்லி, அவரைப் பற்றிக் கூறினேன். ‘இளம் வயதிலேயே திருமணமாகி வந்த வை.மு.கோதைநாயகி எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார். அவருக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தது அவரது மாமியார்தான் என்பது உலகோர் அறியவேண்டிய செய்தி’. வை.மு. கோதைநாயகி அம்மையார் எழுதிய துப்பறியும் கதைகள் குறித்தும்;, அவர் நடத்தி வந்த ‘ ஜகன் மோகினி’ என்ற பத்திரிக்கையைப் பற்றியும்; பேசினேன். ‘தேசப்பற்று மிகுந்த அவர் காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்ற...