இடுகைகள்

இலக்குவனார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்மானத் தமிழ் மறவர் சி. இலக்குவனார்

படம்
இலக்குவனார் செய்யும் இருந்தமிழ்த் தொண்டை விலக்குவான் செய்த வினையே – துலக்கியதே ஊழின் வழியதொன் றின்மையால் மற்றொன்று சூழினும் முந்துறுஞ் சொல்                                                                            -மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர். பன்முகத்தன்மை கொண்ட திரு. சி. இலக்குவனார் அவர்களை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது நேரில் பார்த்திருக்கிறேன். அவருடைய சொற்பொழிவையும் கேட்டிருக்கிறேன். என் தந்தையார் புலவர். கு.குருநாதன்அவர்கள் மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவராக (1972 -1973) இருந்தார். அக்காலத்தில் தமிழக முதல்வராய் ஆட்சி செய்து கொண்டிருந்த டாக்டர். கலைஞர் அவர்களிடத்தில் தமிழாசிரியர்கள் ஒரு கோரிக்கை வைத்தனர். அதாவது தமிழாசிரியர்களைத் தலைமையாசிரியர்களாக ஆக்கவேண்டும் என்பதே அக்கோரிக்கை. ஆனால் அதற்கு மற்றதுறை ஆசிரியர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அந்த எதிர்ப்புக்கான காரணம் தமிழாசிரியர்...