தமிழுக்கோர் பல்கலைக்கழகம்… உமாமகேசுவரனார்….
2006ஆம்ஆண்டு நான் மூன்றாவது முறையாக அமெரிக்கா சென்றபோது வழக்கப்படி தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) காலை மாலை சில நேரங்களில் இரவு என இரண்டு மூன்று நிகழ்;ச்சிகளில் பங்கேற்பேன். அத்தோடு வெள்ளிக்கிழமை நியூஜெர்ஸி என்றால் சனிக்கிழமை வாஷிங்டன். ஞாயிற்றுக்கிழமை ஃபுளோரிடா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு நண்பர்கள் வீட்டிலும் தங்கியிருப்பேன். அப்படி நான் தங்கியிருக்கும்போது ஒருநாள் என்னை அழைத்து வந்தவர்கள் காலை உணவை எனக்குத் தந்துகொண்டே பேசத் தொடங்கினர். நான் என் பேச்சின் நடுவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைப் பற்றி தற்செயலாகக் குறிப்பிட, அவர்கள் மிக மகிழ்ச்சியாகத் ‘திரு. உமாமகேசுவரனார் அவர்கள் எங்களுடைய தாத்தாதான்’ என்று சொன்னவுடன் நான் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தினேன். அவர்கள் நெகிழ்ந்து போனார்கள். அப்போது நான் சொன்ன வார்த்தைகள் இவைதான், ‘தஞ்சைத் ...