நகைச்சுவைக்கோர் கலைவாணர்… என்.எஸ்.கே…
திரைப்பட உலகில் தங்கள் நடிப்பால், பாடல்களால் புகழ்பெற்ற நடிகர்கள், மிகுந்த செல்வமும், புகழும் பெற்றதோடு உலக மக்களின் மனதில் நீங்காத இடத்தையும் பெற்றனர். ஆனாலும் தங்கள் நகைச்சுவையால் சிறந்த கருத்துக்களை மக்களின் மனங்களில் விதைத்து, சிரிப்பு என்னும் பயிரை வளர்த்தவர்களில் இருவர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஒருவர் இங்கிலாந்திலே பிறந்து அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களில் நகைச்சுவை வேந்தராக விளங்கிய சார்லி சாப்ளின். மற்றொருவர் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி என்ற ஊரில் பிறந்து, நாடகங்களில், திரைப்படங்களில் புகழையும், பொருளையும் ஈட்டிய, ‘ கலைவாணர்’ என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ற திரு. என். எஸ். கிரு ஷ் ணன் அவர்கள். இந்த இரு நடிகர்களுக்கும் ஓர் ஒற்றுமையும், பெருமையும் உண்டு. அப்பெருமை, திரையுலகைச் சார்ந்த இந்த இருவருக்கு மட்டுமே சிலை வைத்துப் போற்றியிருக்கிறார்கள் இவர்களால் மகிழ்ந்த மக்கள். சார்லி சாப்ளினுக்கு இங்கிலாந்திலும், திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு அவர் பிறந்த ஊரான நாகர்கோவிலும், சென்னையிலும் சிலைகள் ...