இடுகைகள்

G.Gnanasambandan. Gnanasambandan.in லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காடு… கடவுளின் வீடு…

படம்
                “ மணிநீரும்  மண்ணும்  மலையும்  அணிநிழற்                 காடும்  உடைய  தரண்.”                பூமியில் மனிதஇனம் தோன்றுவதற்கு முன்பு தோன்றியவை மரங்கள் சூழ்ந்த வனம். மரங்களைத் தொடர்ந்தே உலக உயிரினங்களும் பின்னர் மனித உயிர்களும் தோன்றியிருக்கலாம் என்பது அறிவியல் கூறும் செய்தி. உலகெங்கும் காடுகள் இருந்தன என்பதற்குச் சான்றாதாரங்கள் அந்தந்த நாட்டில் தோன்றிய இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் போன்றவையே.  இந்திய பரத கண்டத்தில் தோன்றிய ஆதி காவியமான  வால்மீகியால்  எழுதப்பட்ட  இராமாயணத்தில்  இராமன் 14வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கைகேயி வரம் கேட்பதாகக் காட்டப்படுகிறது. இதை அடுத்துத் தோன்றிய மகாபாரதத்திலும் பாண்டவர்களும் பாஞ்சாலியும் 12ஆண்டுகள் காட்டில் வசிக்கவேண்டுமென்று துரியோதனன் கட்டளையிட்டதாக அக்காப்பியம் எடுத்துக்கூறுகிறது.    ...

ஆண்டவன்கட்டளையும்… அடிமைப்பெண்ணும்…கே.சங்கர்

படம்
தமிழ்த்திரையுலகின் வரலாற்றின் தொடக்கத்தில் இயக்குநர்கள்தான் முடிசூடா மன்னர்களைப்போல திரைப்பட உலகில் ஆளுமை செலுத்தி வந்தார்கள்.  ராஜா சாண்டோ, சுந்தர்ராவ் நட்கர்ணி, தாதா மிராசி, எஸ்.எஸ்.வாசன்  இவர்கள் காலத்தை அடுத்து வந்த  ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம்,  தற்போதுள்ள  சங்கர்  எனவும் இவர்களைத் தொடர்ந்து இளையதலைமுறையைச் சார்ந்த  வினோத், லோகே ஷ்  கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ்  போன்றவருடைய தனித்தன்மைகளையும் சொல்லிக்கொண்டே செல்லலாம். இத்தகைய இயக்குநர்கள் வரிசையில் தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த  புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்,  நடிகர்  திலகம்  சிவாஜி கணேசன்,  காதல்  மன்னன்  ஜெமினி  கணேசன்,  ஜெய்சங்கர்,  முத்துராமன் , என நான்கு தலைமுறைநடிகர்களையும்  என். டி. ராமாராவ்,  எம். ஜி. ஆர்,  செல்வி. ஜெயலலிதா  என    மூன்று  முதல்வர்களையும்  இயக்கிய பெருமைக்குரியவர் ஒருவர் உண்டென்றால் அவர்தான்  டைரக்டர்  கே. சங்கர்....

சந்தேகப் பேய்…

படம்
          ஒருமுறை நண்பர்களுடன் கொடைக்கானல் கிளம்பினோம். என்னைச் சேர்த்து ஐந்து பேர். இருக்கிற காசை வைத்துக்கொண்டு, சங்கடங்களைக் கூட, சந்தோஷமாக எடுத்துக்கொள்ளும் வயது அப்போது. நாங்கள் ஐந்து பேருமே, கொடைக்கானலை அப்போதுதான் பார்க்கிறோம்.                நாங்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும், அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எங்கள் தோற்றத்தைப் பார்த்தவுடன், சடாரென்று கைடாக மாறி, எங்களுக்கு வழிகாட்ட, தங்க, உணவு ஏற்பாடு செய்யத் தயாராகி விட்டார். தங்குவதற்கு ஊருக்கு நடுவிலிருந்தால் அதிக வாடகை ஆகுமென்று மரங்களடர்ந்த தோப்புக்கு நடுவே, ஏற்பாடு செய்து கொடுத்தார்.                அது  ‘ நெஞ்சம்  மறப்பதில்லை’  வீடு போல் இருந்தது. மாடியறையில் தங்குதற்கு ஏற்பாடு செய்துவிட்டு, ஒரு திடுக்கிடும் செய்தியையும் சொன்னார். அந்த அறையில் ஒரு பெண் தூக்கு மாட்டிச் செத்ததாகவும், அந்த உடலைப் புதைக்காமல் எரித்துவிட்டதால் பேய் வருவதற்கான சாத்...

மீனுக்கும் ஆயுள் கம்மி…

படம்
                ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் நமக்கு வழங்கும். சிறுபிள்ளைகளாக இருக்கும்போது, எங்காவது சுற்றுலா செல்கிறோம் என்று சொன்னால் இரவெல்லாம் தூங்கமாட்டோம். பஸ்ஸிலோ, ரயிலிலோ ஜன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு ஓடிக்கொண்டிருக்கின்ற மரங்களை, எதிர்த்துச் செல்லும் வாகனங்களை, கூடவே வரும் நிலாவை, மேகத்தை ரசித்து மகிழ்வது எப்போதும் எல்லோருக்கும் பிடிக்கும்.            திருவனந்தபுரத்திலிருந்து செங்கோட்டை வரும் வழியில்  ‘ புனலூர்’  என்ற ஊருள்ளது. அந்த ஊர் தமிழ்ச்சங்கத்திற்கு ஒருமுறை நான் பேசப் போயிருந்தேன். கூட்டம் முடிந்ததும் நண்பர்கள் அந்த ஊரிலிருந்த ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். மிகப்பெரிய ஆறு. ஆற்றினையொட்டிய மலைமீது சாலை, மலைச்சரிவில் வீடுகளும் கட்டிடங்களும் அதில் அந்த உணவு விடுதி அமைந்திருந்தது.                மழை எப்போது வரும். எப்போது நிற்கும் என்று சொல்லமுடியாதபடி வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. நா...

குருவே வழிகாட்டி…. வாழ்வின் ஒளிகாட்டி…

படம்
                    கற்றது  கைம்மண்  அளவு…..  கல்லாதது  உலகளவு…’                இது பழங்காலத்தில் நம்முடைய ஒளவைப் பாட்டி சொன்ன வார்த்தை.                ‘அப்ப எவ்வளவு நாள் படிக்கிறது?’                ‘இதுல சந்தேகம் என்ன?’                ‘அதுக்கப்புறம் படிக்க வேண்டாமா?’                இப்படிப் பலபேர் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம் பெருமையாகச் சொன்னார். ‘எம் பையன் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்!’                ‘அடடே அப்படியா? அப்புறம் என்ன செய்யப்...

மனிதக் கணினி செய்குத்தம்பி பாவலர்…

படம்
'அவதானம்’  என்பது ஒரே நேரத்தில் பல செயல்களை  ‘ அவதானித்தல்’  எனப் பொருள்படும். எட்டுவேலைகளை ஒரே நேரத்தில் செய்கின்ற ஆற்றலுடையவரை  ‘ அ ஷ் டாவதானி’  என்றும், பத்து வேலைகளைச் செய்பவரை  ‘ தசாவதானி’  என்றும், பதினாறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவரை  ‘ சோட ஷ   அவதானி’  என்றும் அழைப்பது வழக்கம். இந்த  ‘ அவதானி’  என்ற வடசொல்லுக்குத் தமிழில்  ‘ கவனகர்’  என்று பொருள். இதேபோல, நூறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவர்களை  ‘ சதாவதானி’  என அழைப்பார்கள். அத்தகைய சதாவதானிகளில் ஒருவர்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  சதாவதானி  செய்குத்தம்பி  பாவலர் . இவர் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலைப் பெற்றதோடு ஏக சந்தக் கிராதியாகவும் திகழ்ந்தார்.  ‘ ஏக  சந்தக்  கிராதி’  என்ற வடசொல்லுக்குப் பொருள் ஒருமுறை ஒரு சொல்லைச் சொன்னால் அதனை அப்படியே உள்வாங்கிக்கொண்டு திரும்பச் சொல்லுகிற திறமை. அத்திறமை உள்ளவர்களை  ‘ ஏக  சந்தக்  கிராதி’  என அழைப்பது வழக்கம். சதாவதானி செய்குத்தம்பி பா...

குரங்கும்… குழந்தையும்…

படம்
                    ஒரு ஊருக்கு ராமாயணக் கதையைக்  ‘ கதா  காலட்சேபம்’  செய்ய ஒரு முதியவர் வந்திருந்தார்.        ஊர்ப்பெரியவர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தார்கள். கதை சொல்பவர் ஆர்வத்தோடு கேட்டார். ‘பெரியோர்களே, இராமனின் கதையை, ராமாயணத்தை உங்கள் ஊரில் காலட்சேபம் செய்ய வந்துள்ளேன்…. சம்மதம்தானே!’                ‘சந்தோஷம்…. சம்மதம்…’ என்றார்கள் ஊர்ப்பெரியவர்கள்.                ‘ஒருமாதம் முழுவதும் சொல்லட்டுமா?’                ‘ஒரு மாதமா…’இழுத்தபடி கேட்டார்கள் ஊரார்.                ‘சரி 15 நாட்கள் கதை சொல்லவா?’               ...

அறிவே ஆயுதம்…

படம்
  ‘ எடுத்த  காரியம்  யாவினும்  வெற்றி’  – நம்முடைய  மகாகவி  பாரதியின்  உற்சாகமான பாடல் வரி. படிக்கும்போதே நமக்கு உற்சாகத்தையும், மன எழுச்சியையும் உண்டாக்குகிறது.       எல்லாக் காரியங்களிலும் எல்லோராலும் வெற்றிபெற முடியுமா?  அப்படியானால் ஓட்டப்பந்தயங்களில் சிலர் மட்டுமே வெற்றிக்கோப்பையைப் பெறுகிறார்களே! மற்றவர்கள் தோல்வியடைகிறார்களே இதற்குக் காரணம் என்ன?                 முல்லா  நஸ்ருதீன்  ஒருமுறை தன் வீரப்பிரதாபங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்.                ‘ஒருதடவை நான் என் எதிரிகளை ஓட வைத்தேன் தெரியுமா?’                ‘அப்படியா, எப்படி முல்லா இதைச் செய்தீர்கள்?’ – ஒருவன் ஆர்வத்தோடு கேட்டான்.        ‘அவர்களைப் பார்த்தவுடன் நான் ஓட ஆரம்பித்தேன். அவர்களும் என்னை விரட்டிக்கொண்டு ஓடி வந...

பகீரதனும்… கங்கையும்…

படம்
மனித வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவை  முயற்சி,  விடாமுயற்சி,  இடைவிடா  முயற்சி.  இந்த மூன்றையும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு முன்னேற வேண்டும். முயற்சி  செய்தவர்களுக்கெல்லாம் வெற்றி கிடைத்துவிடுமா? என்று ஒரு கேள்வியைச் சிலர் கேட்பார்கள். இதற்குத் திருவள்ளுவர் விடைசொல்லும்போது                 தெய்வத்தான்  ஆகா  தெனினும்  முயற்சிதன்                 மெய்வருத்தக்  கூலி  தரும். இறைவனின் அருள் இல்லாவிட்டாலும்கூட, ஒருவருடைய முயற்சி அந்த முயற்சிக்கு ஏற்ற பலனைக் கொடுக்கும். அது தெய்வத்தால் கூட முடியாததாக இருக்கலாம். ஆனால் முயற்சி செய்தால் எவரும் வெற்றிபெறலாம். இதற்கு ஆதாரமாகப் புராணத்தில் சொல்லப்படுகின்ற  பகீரதனுடைய  கதையைச் சான்றாகக் காணலாம். தம் முன்னோர்களின் சாபத்தைப் போக்குவதற்காக ஆகாயத்தில் ஓடுகின்ற கங்கைநதியை (பாகீரதி) பூமிக்குக் கொண்டுவரும் முயற்சியாகச் சிவபெருமானை நோக்க...

சிரிப்பும்…. சிறப்பும்…

படம்
                  “உலகின் முதல் பெண்மணி யார்?”                “ஏவாள்… சார்”                “அவளோட சிறப்பும் பெருமையும் எது?”                “கடவுளால் படைக்கப்பட்டது சிறப்பு சார்”                “பெருமை?”                “அவளுக்கு மாமியார் கிடையாது சார்”                ஒரு வகுப்பறையில் நடைபெற்ற உரையாடல் இது.                ‘இராமன் காடு சென்றபோது சீதையும் உடன் சென்றாளே…. ஏன் தெரியுமா?’              ...

நம்பிக்கையே நலம் தரும்…

படம்
                சின்ன வயசில எதைப் பார்த்தாலும் பயமாகத்தான் இருக்கும். பகல்ல நாய் பயம். இரவுல பேய் பயம்.                தமிழ்சினிமாப் பேய்கள் பாட்டுப்பாடி, ரொம்பச் சுத்தமாப் புடவைகட்டி, ஷாம்பு போட்டுக் குளிச்சு வரும்.                டி.வி- யில வர்ற பேய்கள் அப்பிடி இல்ல. அதப் பார்;த்தாலே பயமா இருக்கு.               இப்ப இருக்கிற சின்னக்குழந்தைகள் பகல் நேரத்துலகூட, பயத்தில லைட்டைப் போட்டுகிட்டுத்தான் பாத்ரூம் போறாங்க. இந்த பயத்தைப் போக்க என்ன வழி?             முதல்ல தன்னம்பிக்கை, அடுத்தது கடவுள் நம்பிக்கை, தேவையில்லாதது மூடநம்பிக்கை. தன்னம்பிக்கைக்கும், ஆணவத்துக்கும் என்ன வேறுபாடு?             படகோட்டின்னு’  பழைய எம்.ஜி.ஆர்;. படம் ஒண்ணு பார்த்திருப்பீங்க. அதுல ஒரு காட்சி…             ...