வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி….
தமிழ் இலக்கிய உலகில் அச்சுக்கலையின் வருகைக்குப்பிறகு, ஏடுகளைப் பதிப்பித்தபெருமை சி. வை. தாமோதரம் பிள்ளை, தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாத ஐயர், பின்னத்தூர் நாராயணசாமிஐயர் போன்றோருடைய பணி குறிப்பிடத்தக்கது. இவர்களை அடுத்த நிலையில் காண்கிறபோது பதிப்பாசிரியராகத், தமிழ், மலையாள சொற்களஞ்சியங்களை உருவாக்கியவராக இலக்கியங்களின், அது எழுதிய புலவர்களின் காலங்களைக் கணித்த பெருமை திரு. வையாபுரிப்பிள்ளை அவர்களுக்கே உண்டு. தமிழகத்தின் தென்கோடியில் பிறந்த இவர் திருவனந்தபுரத்திலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஆற்றிய தமிழ்ப்பணிக்கு ஈடுஇணை இல்லை. இலக்கியங்களின் காலத்தை இவர் நிர்ணயித்ததில் முரண்பாடுகள் உண்டு என மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் மாற்றுக் கருத்தும் தெரிவித்தனர். எவ்வாறு இருப்பினும் வையாபுரிப் பிள்ளை அவர்களினுடைய கூர்த்த அறிவும், நுண்மாண் நுழைபுலத்தோடு கூடிய ஆராய்ச்சி முயற்சியும் அனைவராலும் போற்றத்தகுந்த ஒன்று. இத்தகைய பெருமைமிகுந்த தமிழுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வையாபுரிப்பிள்ளை அவர்களைப் பற்றிய விரி...