இடுகைகள்

gnanasambandan blog லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணன் எனும் பழைமையான கடவுள்…

படம்
        ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்        ஒருத்தி மகனாய் ஓளித்து வளர      தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த      கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்      நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை      அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்      திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்… திருமாலின் பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரமே முழுமைபெற்ற அவதாரமாகக் குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் கடவுளாகப் போற்றப்படுகிறார்.  தொல்காப்பியத்தில் ஐவகை நிலங்களும் அந்நிலங்களுக்குரிய கடவுளர்களுமாகச் சொல்லப்படும்போது  “மாயோன் மேய காடுறை உலகமும்” என முல்லை நிலத்திற்குரிய கடவுளாகக் கண்ணபிரான் கூறப்படுகிறார்.  பன்னிரு ஆழ்வார்களும் அவர்களில் ஒருவராகிய ஆண்டாளும் மேற்குறித்த பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரத்தையே மகிழ்ந்து மகிழ்ந்து பாடுகின்றனர்.  மகாகவி பாரதியாரும் ‘கண்ணன் பாட்டு’ எனும் தனி இலக்கிய வடிவ...

நூலகமே கோவில்….

படம்
  ‘ஒரு நூலகம் திறக்கப்படுகிறபோது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்பது ஆன்றோர் வாக்கு. இது உண்மையா! என்று பலர் யோசிக்கலாம். நான் சந்தித்த ஒரு அனுபவத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஒரு சுதந்திர தினத்தன்று மதுரையில் மத்திய சிறைச்சாலையில் சிறப்பு நிகழ்வுக்காக என்னைப் பட்டிமன்றம் பேச அழைத்திருந்தார்கள். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், சிறையில் இருக்கின்ற சிறைவாசிகளையே பேச்சாளர்களாகப் போட்டுக்கொள்ளலாம் என்று நான் சொன்னபோது அப்போது சிறைக்காப்பாளராக இருந்த அதிகாரி மிக்க மகிழ்ச்சியடைந்து ‘ஐயா நீங்க நடுவரா வாங்க நான் பேச்சிலே ஆர்வமுள்ள ஆறுபேரை தேர்வு பண்ணி வைக்கிறேன்’ என்றார்.  அதேபோல கூட்டம் தொடங்கியது. வரவேற்புரை முடிந்தபிறகு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நான் முன்னுரை சொல்லியபிறகு அதில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள். ஆச்சர்யம் அவர்களைச் சிறைவாசிகள் என்றோ, ஏதோ ஒரு குற்றத்திற்காகத் தண்டனை பெற்று வந்தவர்கள் என்றோ சொல்ல முடியாதபடி அவ்வளவு சிறப்பாகப் பேசினார்கள். அதில் இரண்டுபேர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களையும் பலரும் வியக்கும் வண்ணம் ப...

மீண்டும் பிறப்பேன்… குதிராம் போஸ்…

படம்
  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா தமிழ்ச்சங்கத்தின் அழைப்பின்பேரில் நாங்கள் எங்கள் பட்டிமன்றக் குழுவோடு கல்கத்தா சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்தபிறகு கல்கத்தாவின் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.  அதில் முக்கியமாக எங்களைக் கவர்ந்தது விக்டோரிய மகாராணியின் அரண்மனையும் (Victoria Memorial) அதில் அமைந்திருந்த அருங்காட்சியகமும்தான் (Indian Museum) . நாங்கள் அந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்களையும் ஓவியங்களையும் பார்த்துக்கொண்டு வந்தோம்.  அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஓவியங்களில் ஒன்று என்னைச் சற்றுநேரம் திகைக்க வைத்தது. அந்த ஓவியத்திலிருந்த இளைஞனைப் பற்றி நான் பலமுறை மேடைகளில் பேசியிருக்கிறேன், பலர் பேசக் கேட்டிருக்கிறேன்.  18வயதே ஆன அந்த இளைஞர், அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் நிலையை எண்ணி வருந்தி, அதற்கு மாற்று ஆயுதப்புரட்சிதான் என்று துணிந்து பல்வேறு செயல்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செய்துவந்தார். அதன்காரணமாகக் கைது செய்யப்பட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.  நாளை விடிந்தால் அவருக்க...

எல்லா உயிரும்…நம் உயிர் தான்…

படம்
                வீட்டில் ஏதாவது ஜீவன்களை வளர்ப்பது இயல்பான விஷயம். அதனைப் பற்றிச் சொல்வதற்கு முன், ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.                சின்னப்பையன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்த சமயத்தில், அவன் ஆசையாக வளர்த்து வந்த மைனா இறந்துவிட்டது. சாயங்காலம் அவன் வீட்டுக்கு வந்ததும், தயங்கியபடி அம்மா அவனிடம் சொன்னாள். அவனோ விளையாடப் போய்விட்டான். விளையாடித் திரும்பியவன் மைனா எங்கே? என்றான். டேய் அப்பவே சொன்னேன். தெரியலையா? அது செத்துப் போச்சு என்றாள் அம்மா.                பையன் உடனே புரண்டு புரண்டு அழுதான்.                அவனைத் தூக்கி நிறுத்தி, ஒரு அடி கொடுத்தாள் அம்மா.                டேய் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் செத்துப் போச்சுன்னு சொன்னேனே… உடனே விளையா...

உன்னையே நீ உணர்வாய்…

படம்
               புராணங்களில் வரும் அனுமன், பீமன், கடோத்கஜன் ஆகியோருக்கு இன்றும் சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் தனிமரியாதை உண்டு. இன்றைக்கு சக்திமான் ஸ்பைடர்மேன், ஹீமேன் மாதிரி அக்காலத்தில் அவர்கள் இருந்தனர்.                எல்லா மனிதர்களும் வலிமை உள்ளவர்களே. ஆனால் தன் பலத்தை அறியாததுதான் அவர்களின் குறை!                ஒருமுறை சென்னையில் ஓர் இளைஞர் கைகளால் தொடாமல் தன் பற்களாலேயே தண்ணீர்ப் பானையைத் தூக்கி ஒரு சுற்று சுற்றிக் கீழே வைத்தார்.                கோவையில் ஒருவர் தன் தலைமுடியில் லாரியைக் கட்டி இழுத்துக் கட்டினார்.                சிலருக்கு மட்டும் பற்களும், தலைமுடியும் அவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கிறதே எப்படி?        ...

காலத்தை வென்ற கவிஞர் கா.மு.ஷெரீப் .…

படம்
தமிழ்த் திரையுலகம் 1931ஆம் ஆண்டு பாட்டோடுதான் பேசத் தொடங்கியது. எனவே இன்றைக்குவரைக்கும் தமிழ்த் திரைப்படங்களில் பாடல் என்பது ஒரு பிரிக்க முடியாத அங்கம். இப்பாடலை தொடங்கி வைத்த பிதாமகர் என்ற பெருமை தமிழ்ப்பாடல் உலகின் பிதாமகர் பாபாநாசம் சிவன் அவர்களையே சாரும். அவரைத் தொடர்ந்து உடுமலை நாராயணகவி, கு.ம.பாலசுப்பிரமணியன், கு.ச.கிருஷ்ணமூர்த்தி, என்ற வரிசையில் தனக்கென ஒரு தனியிடத்தை வகுத்து அதில் தடம் பதித்தவர் கவிஞர் .  கா.மு.ஷெரீப் அவர்கள். தமிழ்த் திரையுலகில் தத்துவப் பாடல்களானாலும், காதல் பாடல்களானாலும் அப்பாடல்களில் இவரின் கற்பனை வளம் நெஞ்சை நிறைக்கும். சந்த நயம் செவியில் இனிக்கும்.                                ‘தொட்டால் மணக்கும் ஜவ்வாது                                சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு         ...

செம்மொழி நாயகர்…பரிதிமாற் கலைஞர்…!

படம்
மதுரை மாநகரம் ஈராயிரம் ஆண்டுப் பழைமையோடும் குன்றாத பெருமையோடும் இன்றும் திகழ்ந்து வருகிறது. முச்சங்கங்கள் தோன்றியது இம்மதுரையில்தான். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் போன்ற சங்கப்புலவர்கள் வாழ்ந்ததும் இம்மதுரையில்தான். இதன் தொடர்ச்சியை இருபத்தியோராம் நூற்றாண்டிலும் காண்கிறோம். மதுரையின் பெருமையை உலகறியச் செய்ததோடு தமிழ் உயர்தனிச் செம்மொழிதான் என முதலில் முழக்கமிட்டவர் பரிதிமாற் கலைஞர். இவர் 1870ஆம் ஆண்டு மதுரைக்கு அருகிலுள்ள விளாச்சேரி என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. இவர் தம் தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரைச் சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். (தற்போது மதுரைக் கல்லூரி) உயர்தனிச் செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர் பரிதிமாற் கலைஞர். பிரித்தானியரால் திணிக்கப்பட்ட ஆங்கிலமொழிக்கு தமிழர்கள் அடிபணியக்கூடாது என்றும் ஆணித்தரமாக வாதுரை செய்தவர் நம் பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர் ஆவார். பரிதிமாற் கலைஞர் ஒரு தமிழாசிர...

டைனிங் டேபிளில் சாப்பிட்ட குரங்கு…

படம்
“ வாய்விட்டுச்  சிரித்தால்  நோய்  விட்டுப்  போகும்”  என்று சொல்வார்கள். இவை பொய்யில்லை. மிகையுமில்லை.                வெவ்வேறு அளவில் மனஅழுத்தங்கள் இன்றைக்கு அதிகரிக்கின்றன. இளைஞர்களில் பலருக்கும் மன அழுத்தங்கள் இருக்கின்றன. சிரிக்கத் தெரிந்தால் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.                வெளிநாட்டில் ஆபரேஷனுக்கு முன்பு ஒருவருக்கு மயக்க மருந்து கொடுக்கப் போனார்கள். அவர் மறுத்துவிட்டு ‘வேண்டாம்… சார்லி சாப்ளின் படத்தைப் போடுங்கள் போதும்’ என்றிருக்கிறார். அதன்பிறகு ஆபரேஷன் நடந்திருக்கிறது. நகைச்சுவையின் வலிமை அது.                கேன்சராலோ, எய்ட்ஸாலோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முன்னால் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பபூன்’ போல வேஷம் போட்டு வித்தைகள் காட்டியபோது, அந்தக் குழந்தைகள் அப்படியொரு சிரிப்புச் சிரித்தார்களாம்.     ...

பேசும் கலை வளர்ப்போம்…!

படம்
வெளிநாடுகளில் ஆரேட்டிரிக் பேச்சுப் பயிற்சியைக் கூட ஒரு பாடத்திட்டமாக வைத்திருக்கிறார்கள். ‘இதைப் போய்ப் பாடமாக வைக்க வேண்டுமா?’ என்கிறோம். ஆனால், எதை எந்தச் சமயத்தில் யாரிடம்… எப்படிப் பேச வேண்டும் என்பதை இங்கு நாம் கற்றுத் தருகிறோமா? பள்ளிக்கூடமொன்றில் ஒரு கூட்டம். மாவட்ட ஆட்சித்தலைவர் மேடையில் உட்கார்ந்திருந்தார். எட்டாவது வகுப்பு படிக்கிற ஒரு மாணவியை வரவேற்புரை பேசச் சொன்னார்கள். மனப்பாடம் செய்து மேடையேறிய அந்தப் பெண்ணுக்கு பேச்சு மறந்து போய்விட்டது.  ‘மாவட்ட ஆட்சித்தலைவரை நான் பாராட்டி… சீராட்டி… குளிப்பாட்டி…’ என்று தடுமாற்றத்துடன் பேசிக்கொண்டே போக, நெகிழ்ந்து போனார் மாவட்ட ஆட்சித்தலைவர். முன்னாலிருந்த மாணவர்கள் எல்லாம் தாங்க முடியாமல் சிரித்தார்கள். காரணம் பேச்சில் பயிற்சி இல்லாததுதான். செந்தமிழும் நாப்பழக்கம். பேச்சு பழகப்பழகத்தான் வரும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பேச்சுக்கலையை ஒரு பாடமாகக் குறிப்பிட்ட நேரத்தில் சொல்லிக் கொடுத்தால், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலுமே பயன்படும். என்ன பேசுகிறோம் என்பதைக் காட்டிலும், என்ன பேசக்கூடாது என்பது மிகமிக முக்கியம். யாரைய...

அடுத்த வீடே…. அயல்கிரகம்தான்…

படம்
                ‘ விருந்தே  புதுமை ’ என்கிறது தொல்காப்பியத்திலுள்ள ஒரு நூற்பா. அக்காவோ, தாத்தாவோ அல்லது நெருங்கிய உறவினர்களோ நம் வீட்டுக்கு வந்தால், அவர்கள் எல்லாம் விருந்தாளிகள் இல்லையாம். யாரோ முகந்தெரியாமல் வருகிற ஒருவரை வரவேற்று உபசரிப்பதற்குப் பெயர்தான் விருந்து.                நண்பர்களுக்கு விருந்தளிப்பது கடமை. உறவினர்களுக்கு விருந்தளிப்பது உரிமை. நம்மூரைப் பொறுத்தவரை, சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் விருந்தைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் விருந்தோம்பலைப் பற்றித் தனி அதிகாரமே படைத்திருக்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தாளியைக் காக்க வைத்துவிட்டு அமிர்தமாக இருந்தாலும் சாப்பிடக்கூடாது என்கிறார் அவர்.                மழைக்காலத்தில் ஊருக்குள் நுழைகிறவன் அங்கு தங்கிக்கொள்ள முடியும் என்பதற்காகத்தான், கிராமப்புறங்களில் வீட்டுத்திண்ணை என்கிற ...

ஒரு நிமிஷம் பொறு…

படம்
ஒருமுறை  ‘திருஆவினன் குடி’  என்ற பழைய பெயர் கொண்ட பழனித் திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டு (கும்பாபிேஷக) விழாவிற்கு, நேர்முக வர்ணனைக்காகப் போயிருந்தேன்.                அப்போது, அறுபடை வீடுகளில் ஒன்றாகிய அந்தப் பழனிமலை பற்றி கல்வெட்டுக்களில், இலக்கியங்களில், புராணங்களில், நாட்டுப்புறக் கதைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் படித்துப் பார்த்து வியந்து போனேன்.                ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று ஒரு பழமொழி தமிழில் உண்டு. கோயில் அத்தனை முக்கியமானதா? என்றொரு கேள்வி எழுகிறது. தமிழர்களின்  அடையாளம் என்று பட்டியலிடும்போது, கோயில், நாதஸ்வரம், பரதம், தமிழிசை எனத் தங்களுக்கெனத் தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டவர்கள் தமிழர்கள்.                ஓர் அரசன், ஒரு கோயிலைக் கட்டும்போது, ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. இரண்டாவது,...

கேட்கப்படாத கேள்விகள்… சொல்லப்படாத பதில்கள்…

படம்
    என்னப்பா… சவுக்கியமா?’ என்று யாரையும் பார்த்ததும் நாம் பேசத்துவங்குவது ஒரு கேள்வியிலிருந்துதான்.                கேள்வி கேட்கும் மரபு வேதகாலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. அது புராணங்களிலும் இருக்கிறது. கேள்வி – பதில் பகுதியிருந்தால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கேள்வி கேட்டால் தலை வெடித்து விடும் என்றும் சொல்லிப் பயமுறுத்துவார்கள்.                விக்கிரமாதித்தன் கதைகளில் மரத்தில் தொங்கும் வேதாளம்கூடக் கேள்வி கேட்கும். மகாபாரதத்தில் குருேஷத்திர யுத்தத்திற்கு முன்பு, கிருஷ்ணரிடம் அர்ஜுனன் கேட்கிற கேள்வியும் பதிலும்தானே பகவத்கீதை.                வில்லிபாரதத்தில் நச்சுப் பொய்கைச் சருக்கத்தில் ‘கேள்வி – பதில்’ பகுதி அவ்வளவு அருமையாக இருக்கும். அதில் ஒரு கேள்வி வரும். ‘உலகத்திலேயே வேகமானது எது?’ இதற்கு  ‘ மனம்’  என்று பதில் சொல்வான் தர்மன். அது போலவே...

உலகம் உங்களை அழைக்கிறது…

படம்
சுற்றுலா போவது என்பதே சந்தோஷம் தரும் விஷயம். இது வெளிநாடுகளில் பழக்கமான அளவுக்கு நம் நாடுகளில் பழக்கமாகவில்லை.                நாம் திருப்பதி, ராமேஸ்வரம், பழனி என்று “சேர்ந்து கொண்டு” ஆன்மிகத்தின் பெயரால் கோயில்களுக்குப் போய் வருகிறோம். மலைக்கு நடந்து போவது. இங்குள்ளவர்களுக்கு ‘உடற்பயிற்சி’யாகவும் இருக்கிறது.                பள்ளிகளில் மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, ‘அந்தப் பக்கம் பார்க்காதே. இந்தப் பக்கம் நடக்காதே’ என்று சத்தம் கேட்கும். போலீஸ், கைதியை அழைத்துச் செல்கிற மாதிரி, மாணவர்களை அழைத்துச் செல்வார்கள் ஆசிரியர்கள். கொடைக்கானலுக்குச் சமீபத்தில் போயிருந்தேன். பள்ளி மாணவர்கள் சிலர், மவுன ஊர்வலம் போல சென்று கொண்டிருந்தனர்.                அப்புறம் ஓர் இடத்தில் அவர்களை உட்கார வைத்திருந்தார்கள். இதில் ஒரு பையன் சோகமாய் உட்கார்ந்திருந்தான். ‘என்னப்பா…...

சிரிப்பதே தியானம்தான்!

படம்
எப்போதும் ‘உம்;’ என்று முகத்தைக் காங்கிரீட் தனமாக வைத்துக் கொண்டிருப்பவரிடம் நெருங்கிப் பேசப் பலரும் யோசிப்பார்கள்.                கொஞ்சம் சிரித்த முகமாக இருப்பவர்களிடம் பேச யோசிக்க மாட்டார்கள். சட்டென்று பேச்சின்மூலம் நெருக்கம் உருவாகி விடும். சுற்றுலாவுக்குப் போகும்போது, கலகலப்பான ஒருத்தர் இருந்தால் அந்தச் சுற்றுலாவே கலகலப்பாக ஆகிவிடும். அதற்காகவே அவருக்காகக் காத்திருந்து அவருடைய சவுகர்யத்திற்கேற்ப சுற்றுலா போகிறவர்களும் இருக்கிறார்கள்.                சில கனமான சந்தர்ப்பங்களையும் நகைச்சுவை கலந்த பேச்சு திசை மாற்றிவிடும். வின்சென்ட் சர்ச்சில் சீரியஸாக எதைப் பற்றியோ மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது கீழே இருந்த ஒருவர், காகிதத்தில் ‘முட்டாள்’ என்று எழுதி, சர்ச்சிலிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.                அதை வாங்கிப் பார்த்த சர்ச்சில் சொன்னார், ‘யாரோ ஒரு கனவான் அவ...

வரலாற்றை நேசிப்போம்…

படம்
தமிழ்நாட்டில் ‘வரலாறு’ என்ற சொல் பல்வேறு வகையான பொருள்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.                ‘வரலாற்று நாயகனே வருக’                ‘வாழுகின்ற வரலாறே வருக’                என்று தங்கள் தலைவர்களுக்காகத் தொண்டர்கள் புதிய முழக்கங்களை வெளியிடுகிறார்கள். கிராமங்களிலோ ‘அவன் வாழ்ந்த வாழ்க்கை, அவன் வரலாறு எங்களுக்குத் தெரியாதா’ என்ற நலிந்து போனவர்களைப் பற்றி பேசிக்கொண்டு திரிகிறார்கள்.                வகுப்பறைகளிலோ ‘ஹிஸ்ட்ரி’ வாத்தியாரும் போரு, ஹிஸ்ட்ரி பாடமும் அக்கப்போரு, ஏன்னா அதுல எப்பப் பாத்தாலும் போருபோருன்னு வருது’ என்று மாணவர்கள் சலித்துக் கொள்கிறார்கள்.                இன்னும் சிலரோ, ‘நடந்தவைகளைப் பற்றியும், இறந்தவர்களைக் குறித்தும் படிப்பதனால் எதிர்காலத்திற்கு என்ன பயன்? எல்லாரையுமே கம்ப்யூட்டர் படிக்க வைங்க, பில்கேட்ஸ் வேலை கொடுப்பான்’ என்று கம்ப்யூட்டரின் வரலாறு தெரியாம...

தமிழுக்கோர் பல்கலைக்கழகம்… உமாமகேசுவரனார்….

படம்
2006ஆம்ஆண்டு நான் மூன்றாவது முறையாக அமெரிக்கா சென்றபோது வழக்கப்படி தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) காலை மாலை சில நேரங்களில் இரவு என இரண்டு மூன்று நிகழ்;ச்சிகளில் பங்கேற்பேன். அத்தோடு வெள்ளிக்கிழமை நியூஜெர்ஸி என்றால் சனிக்கிழமை வாஷிங்டன். ஞாயிற்றுக்கிழமை ஃபுளோரிடா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு நண்பர்கள் வீட்டிலும் தங்கியிருப்பேன்.                அப்படி நான் தங்கியிருக்கும்போது ஒருநாள் என்னை அழைத்து வந்தவர்கள் காலை உணவை எனக்குத் தந்துகொண்டே பேசத் தொடங்கினர். நான் என் பேச்சின் நடுவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைப் பற்றி தற்செயலாகக் குறிப்பிட, அவர்கள் மிக மகிழ்ச்சியாகத் ‘திரு. உமாமகேசுவரனார் அவர்கள் எங்களுடைய தாத்தாதான்’ என்று சொன்னவுடன் நான் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தினேன். அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.                அப்போது நான் சொன்ன வார்த்தைகள் இவைதான், ‘தஞ்சைத் ...