இடுகைகள்

ஏப்ரல் 13, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுபகிருது என்னும் நற்செய்கை

படம்
உலகெங்கும் இருக்கிற இனிய தமிழ் மக்களுக்குச் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! தமிழ் வருடங்கள் பிரபவ எனத் தொடங்கி அட்சய என அறுபது ஆண்டுகளாக நிறைவுறுகின்றன.  ஒரு மனிதருடைய வாழ்க்கையில் அவர் பிறந்த தமிழ்ஆண்டு மீண்டும் வருமானால் அவருக்கு வயது 60 நிரம்பிவிட்டது என்பது பொருள். சான்றாக நான் பிறந்த தமிழாண்டு மன்மத ஆண்டு. அது மீண்டும் வந்தபோது என்னுடைய 60ஆவது வயதில் நான் என்னுடைய மனைவியோடு திருக்கடையூர் சென்று இறைவனை வணங்கி வந்தேன்.  அத்திருக்கடையூர் எம்பெருமானாகிய சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காகக் காலனாகிய எமனை வீழ்த்திய தலம். அதனால் சிவபெருமானுக்குக் காலகாலமூர்த்தி என்ற சிவநாமமும் உண்டு.  இந்த அறுபது ஆண்டுகளில் இப்போது பிறந்திருக்கும் ஆண்டின் பெயர் சுபகிருது ஆண்டு. இதற்கு நற்செய்தி, நற்செயல் என்பது பொருள் எனப் பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. இச் சுபகிருது ஆண்டு இதற்கு முன்னதாய் 1962இல் வந்திருக்கிறது. அப்போது இந்தியாவின் பிரதமராக பண்டித ஜவஹர்லால் நேரு இருந்திருக்கிறார். சீனப்படையெடுப்பும் இந்தியாவின் மீது நிகழ்ந்திருக்கிறது. நான் அப்போது பள்ளியில் இரண்...