உலகை ஒளிர வைத்தவர்…தாமஸ் ஆல்வா எடிசன்
அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரத்திற்கும் நியூயார்க்குக்கும் இடையில் ‘எடிசன்’ என்ற ஒரு சிற்றூர் இருக்கிறது. இவ்வூரில்தான் தாமஸ் ஆல்வா எடிசன் முதன்முதலில் மின்சார பல்பினை உருவாக்கிக் காட்டினார். நான் சிலமுறை அங்கு சென்றிருந்தாலும் 2019 நவம்பர் மாதம் நியூஜெர்ஸி சென்றபோது எடிசனுக்கும் சென்றிருந்தேன். அங்கு இப்போது புதிதாக மிகப் பிரம்மாண்டமான டவர் ஒன்றை உருவாக்கி அதன் உச்சியில் மிகப்பெரிய பல்பினையும் பொருத்தியிருக்கிறார்கள். அத்தோடு அவர் உருவாக்கிய கிராமபோன் ரெக்கார்டுயும் பார்த்தேன். அதில் அவர் பதிந்துவைத்திருந்த இசையையும் கேட்கிற வாய்ப்பினையும் நான் பெற்றேன். அங்கே தாமஸ் ஆல்வா எடிசனைப்போன்ற உருவமும், உடையும் உடுத்திய அறிவியலாளர்கள் நமக்கு அங்கிருக்கும் கருவிகளைப் பற்றியெல்லாம் விளக்கம் சொல்லுகிறபோது எடிசனே நேரில்வந்து சொல்வதைப் போல் இருக்கிறது. எடிசன் கண்டுபிடித்த இசைத்தட்டு முதலில் உருளைவடிவத்தில் கைப்பிடியோடு இருந்திருக்கிறது. அதை நாம் சுற்றிக்கொண்டே அதன் மீது ஊசியை வைக்கிறபோது பக்கத்தில் இருக்கும் குழாய்வடிவ ஸ்பீக்கரில் வருகின்ற இசையானது நம்மை வியக்கவைக்...