இடுகைகள்

ஜனவரி 28, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகச் சிறுகதை மன்னர் ஆன்டன் செக்கோவ்

படம்
ரஷ்ய எழுத்தாளர்களுள் மிகவும் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்  ஆன்டன்  செக்கோவ்.   சிறுகதைகளின்  தந்தை  என்று அழைக்கப்படுகின்ற அளவிற்கு இவருடைய கதைகளின் வடிவம் ரஷ்யர்களை மட்டுமல்லாமல் மொழிபெயர்க்கப்பட்ட அத்தனை நாட்டு மக்களையும் ஈர்த்தது. அதிலும் குறிப்பாக சிறுநாடகங்கள் மற்றும் சிறுகதைகள் ரஷ்யாவின் அதிகாரவர்க்கத்தை நையாண்டி செய்ததோடு எளியமக்களின் மனநிலையை, ஆளும் வர்க்கத்தார் உணர்ந்து கொள்ளுமாறு செய்த பெருமையும் இவர் கதைகளுக்கே உண்டு. சான்றாக,  ‘ பச்சோந்தி’  என்ற சிறுகதை இது நாடக வடிவிலும் உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு எல்லா நாட்டு அதிகாரவர்க்கத்தையும் ஒரு அசைப்பு அசைத்துப் பார்த்தது. அந்தக் கதை இப்படி ஆரம்பிக்கும். சந்தைக்கு வந்த ஏழை விவசாயி ஒருவனை ஒரு நாய் கடித்துவிடும். உடனே அவன் காவல்நிலையத்திற்குச் சென்று அந்த நாய் வைத்திருப்பவனைத் தண்டிக்குமாறு வேண்டுவான். அப்போது அந்த காவலர்களுக்குள் நடக்கும் உரையாடல்தான் இந்த நாடகத்தின் உயிர்நாடி. முதல் காவலன்: ‘இந்த நாயை வைத்திருந்தவனை உடனடியாகக் கைது          ...