இடுகைகள்

மார்ச் 17, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வா! வா! முருகா! வடிவேல் அழகா!

படம்
         தமிழர்கள் வாழ்வில் தேரும் திருவிழாவும் பிரிக்கமுடியாத ஒன்று. அதிலும் குறிப்பாகச், சித்திரை தொடங்கி பங்குனி வரையிலும் உள்ள நிலாக் காலம் முழுவதும் விழாக்காலங்கள்தான்.           பங்குனி உத்திரத் திருநாளில் முருகப்பெருமானைக் காண்பதற்கு ஆறுபடை வீடுகளையும் நோக்கி, பக்தர்கள் படையெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தப் பங்குனி உத்திரத் திருநாளில்தான் முருகப்பெருமான்; சூரபத்மனையும் அவன் தம்பியரையும் வதம் செய்து அந்த வெற்றியின் பரிசாகத் தெய்வானையை மணக்கின்றார். இத்திருநாளை நாம் பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகின்றோம் என்று நான் எழுதிக்கொண்டிருக்கும்போது நண்பர் பரமசாமி என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்.                ‘வாங்க! வாங்க! பங்குனி உத்திரத்தன்று பரமசாமியைப் பார்ப்பதில் பரமதிருப்தி’ என்றேன் நான் மகிழ்ச்சியோடு. அவரும் மிக மகிழ்ந்து எல்லா நல்ல நாட்களுக்கும் வாழ்த்துச் சொல்லுவதுபோல, ‘உங்களுக்குப் பங்குனி உத்திரத் திருநாள் வாழ்த்துகள்’ என்று ஆனந்தம் பொ...