சூரியகிரகணம்… அறிவியலிலும், ஆன்மீகத்திலும்
கிரகணம் (Eclipse) என்பது வானில் நிகழும் ஓர் அரிய நிகழ்வாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட நாளில், நேரத்தில், சந்திரன் வரும்போது அதனுடைய நிழல் சூரியனை மறைக்கின்றது. இதையே கிரகணம் என்கிறோம். சந்திரன் தன்னுடைய பயணச்சுற்றில் சூரியனுக்கும் பூமிக்குமான நேர்கோட்டிலிருந்து விலகும்போது அதன் நிழலும் விலகுகிறது. அப்போது கிரகணம் விட்டுவிடுவதாக நாம் சொல்லுகிறோம். இன்னும் விளக்கமாகச் சொல்வதாக இருந்தால் சூரியன் === சந்திரன் === பூமி இதுவே சூரிய கிரகணம் ஆகும். இந்த முழு சூரிய கிரகணத்தின்போது சூரியனுக்கு நடுவில் சந்திரனின் நிழல் விழுந்து ஒரு வளையம் போல காட்சி அளிக்கும். இந்தியாவில் கிரகணம் என்பது சாதாரண கிரக நிகழ்வாகப் பார்க்கப்படாமல் அந்த நேரத்தில் பல சாஸ்திர சம்பிரதாயங்களும் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் மூன்று சூரிய கிரகணங்கள் நிகழ்வது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு 2021, டிசம்பர் மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமை அன்று நிகழக்கூடிய சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.07மணி வரை நீடிக்கும். அதாவது 4மணி நேரம் 8நிமி...