காலத்தை வென்ற கவிஞர் கா.மு.ஷெரீப் .…
தமிழ்த் திரையுலகம் 1931ஆம் ஆண்டு பாட்டோடுதான் பேசத் தொடங்கியது. எனவே இன்றைக்குவரைக்கும் தமிழ்த் திரைப்படங்களில் பாடல் என்பது ஒரு பிரிக்க முடியாத அங்கம். இப்பாடலை தொடங்கி வைத்த பிதாமகர் என்ற பெருமை தமிழ்ப்பாடல் உலகின் பிதாமகர் பாபாநாசம் சிவன் அவர்களையே சாரும். அவரைத் தொடர்ந்து உடுமலை நாராயணகவி, கு.ம.பாலசுப்பிரமணியன், கு.ச.கிருஷ்ணமூர்த்தி, என்ற வரிசையில் தனக்கென ஒரு தனியிடத்தை வகுத்து அதில் தடம் பதித்தவர் கவிஞர் . கா.மு.ஷெரீப் அவர்கள். தமிழ்த் திரையுலகில் தத்துவப் பாடல்களானாலும், காதல் பாடல்களானாலும் அப்பாடல்களில் இவரின் கற்பனை வளம் நெஞ்சை நிறைக்கும். சந்த நயம் செவியில் இனிக்கும். ‘தொட்டால் மணக்கும் ஜவ்வாது சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு ...