இடுகைகள்

பிப்ரவரி 19, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வென்றார்கள்…. தந்தார்கள்….

படம்
          பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எவையாக இருந்தாலும் வகுப்பறைகள் சிறப்படையத் தேவை – நல்ல ஆசிரியர், சிறந்த மாணவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டம். இவை சரியாக அமைந்தால் அத்தகைய கல்விக்கூடங்கள் சிந்தனைக் கூடங்களாக மாறும்.                எனக்கொரு ஆசிரியர் இருந்தார், அவர் பாடவேளை முடியும் மட்டும் பாடம் நடத்தமாட்டார். ஒரு அரைமணி நேரம் நடத்திவிட்டுக் கேள்விகள் கேட்கச் சொல்லுவார் அல்லது வகுப்பு மாணவர்களை இரண்டு அணிகளாக்கி ஒரு அணி மற்றொரு அணியைக் கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் தூண்டுவார். சிலநேரங்களில், தான் சிந்தித்ததைக் கேள்வியாக மாணவர்களிடத்திலே கேட்டுவிட்டுக், கடைசியில் அவரே விடையும் சொல்லுவார்.                ஒருமுறை எங்களுக்குத் திருக்குறள் நடத்திவிட்டுப் பொதுவாக ஒரு கேள்வி கேட்டார். ‘எங்க யாராவது சொல்லுங்க பார்க்கலாம். உடம்பு, உயிர் இந்த ரெண்டுல உடம்ப வளர்க்கறதுக்குச் சாப்பாடு சாப்பிடுகிறோம். தண்ணி குடிக்கிறோம் அது ...