இடுகைகள்

பிட்டுக்கு மண் சுமந்த (சிவ)பெருமான்…

படம்
                    பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை மண் சுமந்த கூலி கொண்டு அக் கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய்                               -திருவாசகம் - அம்மானை மதுரை அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் பெருமையுடையதாகவே திகழ்ந்து வருகிறது. புராணம், இலக்கியம், வரலாறு, புதுமையை ஏற்றல் எனக் காலமாறுதல்களுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தகுதியுடையது இம்மதுரை.      மற்றைய ஊர்களின் மண்ணுக்கும் மதுரை மண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? பிறஊர்களின், நாடுகளின், தேசங்களின் மண்ணில் இறைவன் பிறந்தார், இருந்தார், நடந்தார் என அறிந்திருக்கிறோம். ஆனால் மதுரை மண்ணைத்தான் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் தன் தலையில் சுமந்தார் என்ற பெருமை இம்மண்ணுக்கு உண்டு...

கண்ணன் எனும் பழைமையான கடவுள்…

படம்
        ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்        ஒருத்தி மகனாய் ஓளித்து வளர      தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த      கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்      நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை      அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்      திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்… திருமாலின் பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரமே முழுமைபெற்ற அவதாரமாகக் குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் கடவுளாகப் போற்றப்படுகிறார்.  தொல்காப்பியத்தில் ஐவகை நிலங்களும் அந்நிலங்களுக்குரிய கடவுளர்களுமாகச் சொல்லப்படும்போது  “மாயோன் மேய காடுறை உலகமும்” என முல்லை நிலத்திற்குரிய கடவுளாகக் கண்ணபிரான் கூறப்படுகிறார்.  பன்னிரு ஆழ்வார்களும் அவர்களில் ஒருவராகிய ஆண்டாளும் மேற்குறித்த பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரத்தையே மகிழ்ந்து மகிழ்ந்து பாடுகின்றனர்.  மகாகவி பாரதியாரும் ‘கண்ணன் பாட்டு’ எனும் தனி இலக்கிய வடிவ...

நிதானமாய்க் குளிப்பதும் தியானம்தான்…

படம்
‘அந்தக் காலத்திலே அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா?’ இப்படி ஒப்பிட்டுச் சொல்லி, அலுத்துக் கொள்பவர்கள் நிறையப் பேர் நம்மிடையே இருக்கிறார்கள். காலமாற்றத்தை நாம் எப்படி உணர்கிறோம் என்பது முக்கியம். இரண்டாயிரம் வருஷமாக நிதானமாக நகர்ந்த வளர்ச்சியை நவீனத் தொழில் நுட்பம், கடந்த பத்திருபது ஆண்டுகளுக்குள் புகுந்து முழுக்க மாற்றியமைத்து விட்டது. நாங்கள்கூட பட்டிமன்றத்தில் விளையாட்டாக இப்படிச் சொல்வோம். ‘முன்னாடி மாவாட்டும்போது உரல் அப்படியே இருக்கும், குழவி சுற்றும். இப்போது குழவி அப்படியே இருக்கிறது கிரைண்டரில், உரல் அதைச் சுற்றுகிறது. இது இந்தக் காலம். விளம்பரங்களில்கூட இப்போது மாற்றம். முன்பு பெண்கள் அறையில் குளிக்க, ஆண்கள் காற்றாடக் குளிப்பார்கள். குறிப்பிட்ட ஒரு சோப் விளம்பரத்தில் ஆண் பாத்ரூமில் குளிக்கிறான். இன்னொரு விளம்பரத்தில் ஒரு பெண் நீர்வீழ்;ச்சியில் அட்டகாசமாகக் குளிக்கிறாள். இது இந்தக் காலம். அரசியலிலுள்ள மாற்றத்தைப் பற்றி தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பேசினார்.  முன்பு சாக்பீசால் எழுதிப் போடப்பட்ட கரும்பலகையைப் பார்த்துப் படித்த குழந்தைகள்,...

நூலகமே கோவில்….

படம்
  ‘ஒரு நூலகம் திறக்கப்படுகிறபோது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்பது ஆன்றோர் வாக்கு. இது உண்மையா! என்று பலர் யோசிக்கலாம். நான் சந்தித்த ஒரு அனுபவத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஒரு சுதந்திர தினத்தன்று மதுரையில் மத்திய சிறைச்சாலையில் சிறப்பு நிகழ்வுக்காக என்னைப் பட்டிமன்றம் பேச அழைத்திருந்தார்கள். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், சிறையில் இருக்கின்ற சிறைவாசிகளையே பேச்சாளர்களாகப் போட்டுக்கொள்ளலாம் என்று நான் சொன்னபோது அப்போது சிறைக்காப்பாளராக இருந்த அதிகாரி மிக்க மகிழ்ச்சியடைந்து ‘ஐயா நீங்க நடுவரா வாங்க நான் பேச்சிலே ஆர்வமுள்ள ஆறுபேரை தேர்வு பண்ணி வைக்கிறேன்’ என்றார்.  அதேபோல கூட்டம் தொடங்கியது. வரவேற்புரை முடிந்தபிறகு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நான் முன்னுரை சொல்லியபிறகு அதில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள். ஆச்சர்யம் அவர்களைச் சிறைவாசிகள் என்றோ, ஏதோ ஒரு குற்றத்திற்காகத் தண்டனை பெற்று வந்தவர்கள் என்றோ சொல்ல முடியாதபடி அவ்வளவு சிறப்பாகப் பேசினார்கள். அதில் இரண்டுபேர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களையும் பலரும் வியக்கும் வண்ணம் ப...

மீண்டும் பிறப்பேன்… குதிராம் போஸ்…

படம்
  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா தமிழ்ச்சங்கத்தின் அழைப்பின்பேரில் நாங்கள் எங்கள் பட்டிமன்றக் குழுவோடு கல்கத்தா சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்தபிறகு கல்கத்தாவின் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.  அதில் முக்கியமாக எங்களைக் கவர்ந்தது விக்டோரிய மகாராணியின் அரண்மனையும் (Victoria Memorial) அதில் அமைந்திருந்த அருங்காட்சியகமும்தான் (Indian Museum) . நாங்கள் அந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்களையும் ஓவியங்களையும் பார்த்துக்கொண்டு வந்தோம்.  அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஓவியங்களில் ஒன்று என்னைச் சற்றுநேரம் திகைக்க வைத்தது. அந்த ஓவியத்திலிருந்த இளைஞனைப் பற்றி நான் பலமுறை மேடைகளில் பேசியிருக்கிறேன், பலர் பேசக் கேட்டிருக்கிறேன்.  18வயதே ஆன அந்த இளைஞர், அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் நிலையை எண்ணி வருந்தி, அதற்கு மாற்று ஆயுதப்புரட்சிதான் என்று துணிந்து பல்வேறு செயல்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செய்துவந்தார். அதன்காரணமாகக் கைது செய்யப்பட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.  நாளை விடிந்தால் அவருக்க...

ஆடிப்பட்டம் தேடி விதை…

படம்
  நம் பண்டையத் தமிழர்கள் பன்னிரெண்டு மாதங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்திருந்தார்கள். இதற்குப் பெரும்பொழுது என்று பெயர். அந்த ஆறு பருவங்கள் எவை என்றால்,  1. சித்திரை, வைகாசி - இளவேனில் 2. ஆனி, ஆடி - முதுவேனில் 3. ஆவணி, புரட்டாசி  - கார்காலம் 4. ஐப்பசி, கார்த்திகை - கூதிர்காலம் 5. மார்கழி, தை - முன்பனிக்காலம் 6. மாசி, பங்குனி - பின்பனிக்காலம் என்பவையாகும். முதுவேனிற் காலமாகிய இந்த ஆடிமாதத்தில்தான் சூரியன் தெற்குநோக்கி நகர்கின்ற தட்சிணாயணக் காலம் வருகின்றது. இதே சூரியன் தை மாதம் தொடங்கும்போது வடக்குநோக்கி நகர்வதால் அது உத்திராயணக் காலம் என அழைக்கப்படுகிறது.  ஆடி மாதத்தைப் பொறுத்தவரை பல்வேறு சிறப்புகள் இம்மாதத்திற்கு உண்டு. மழைக்குரிய பருவகாலம் தொடங்கவிருப்பதால் ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது விவசாயிகளின் பேச்சு வழக்கு. இந்த ஆடிமாதத்தில் காற்று தொடர்ந்து வீசுவதால் ‘ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்’ என்பது கிராமத்துப் பழமொழி.  வேளாண்மை தொடங்குகின்ற காலமாதலால் பணப்புழக்கம் குறைவாக இருக்கும், விவசாய வேலைகள் தொடங்கி இருக்கும். இதனால்தானோ ...

கழுகுமலையும்… எல்லோரா குகைக்கோயிலும்…

படம்
               தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் மலைக்குகையில் அமைந்துள்ள சமணப்பள்ளிக்குப் போயிருந்தபோது அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்தும் நான் வியந்துபோனேன். இந்த வண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்று நான் கேட்டபோது, அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் எனக்கு அந்த அதிசயத்தைக் காண்பித்தார்.                என்னை அழைத்துக்கொண்டு அந்தக் மலைகுகைக்கு அருகிலிருந்த சின்னக் காட்டுக்குள் போனார். ஏதோ ஒரு மூலிகை போன்ற செடியிலிருந்து சில பச்சை இலைகளைப் பறித்து அதைக் கசக்கி என் கைகளில் அவர் தடவ, என் கை மருதாணி வைத்ததுபோலச் சிவந்து போனது. அவர் கையும் சிவப்பானது.                ‘இந்தக் கலரு மூணு நாளைக்கு உங்க கையில இருக்கும்’ என்று அவர் பெருமையாகச் சொல்லியதோடு, இது மாதிரி ஆயிரக்கணக்கான செடிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இவற்றின் சாறுகளை வைத்துதான் குகைக்குள் இருக்கின்ற ...