கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி…
‘ இனம், மொழி, ஆகிய வேறுபாடுகளால் கிழிந்து கிடந்த இந்தியாவை ஒன்றாக்கித் தைக்க வந்த ஓர் ஊசி… வ. உ. சி…’ ‘எந்தக் கப்பல் மூலம் கடல் வழியாக வாணிபம் செய்ய வந்து நம்மை ஆங்கிலேயன் அடிமைப்படுத்தினானோ அந்தக் கப்பல் மூலமே அவனை நாட்டை விட்டு ஓடவைக்க வேண்டும்’ என்று வணிகக் கப்பலை ஓட்டிக் காட்டிய பெருமையுடைய ஒரே தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. வ.உ.சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை . இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. இதனால் இவர் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற அடையாளத்துடன் திகழ்ந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், ...