இடுகைகள்

Education லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வியால் உயர்வோம்…

படம்
  “ கற்கை  நன்றே!  கற்கை  நன்றே     பிச்சை  புகினும்  கற்கை  நன்றே!”   பிச்சை எடுத்தாவது படிப்பைத் தொடரவேண்டும் என  அதிவீரராம  பாண்டியன் ‘ வெற்றி  வேட்கை’  என்ற நூலில், கூறியதைக் காண்கிறோம்.      ஏனென்றால் சாதி வேறுபாடு, இனவேறுபாடு, ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வு இத்தனையிலிருந்து, கல்வி ஒரு மனிதனை உயர்த்திக் காட்டும்.           மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவர்க்கும், துரியோதனன் முதலான அவன் தம்பிமார்கள் நூறுபேருக்கும் வில்வித்தை கற்றுத் தந்தவர்  துரோணர்  என்னும் ஆசிரியர் ஆவார்.  அஸ்தினாபுரத்தில்  இவர்கள் அனைவருக்கும் தங்கள் வீரத்தைப் பொதுமக்கள் முன் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள். அன்றைக்கு அர்ச்சுனன், வீரர்களுள் வீரனாய் வெற்றிக்கொடி நாட்டினான்.         அப்போது தேரோட்டியின் வளர்ப்பு மகனான கர்ணன் வில்வித்தையில் தன் திறமையைக் காட்ட, ஆசிரியர் துரோணரிடம் அனுமதி கேட்டான். ஆனால், துரோணரோ, ‘நீ யார்? உன் தாய் தந்தையர் பெயர் என்ன? நீ எந்தக் குல...