இடுகைகள்

ஜனவரி 10, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தந்தையும் மகனும்

படம்
                இந்தக் காலக்குடும்பச் சூழலில் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி போன்ற உறவுகள் நிறைந்த கூட்டுக்குடும்பங்களை நாம் காண்பது அரிதாக இருக்கிறது.                பெரும்பாலும் தாத்தா, பாட்டி போன்ற முதியவர்களிடத்தில் அடுத்த தலைமுறையினர் பேசுவதை, பழகுவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர். அப்பா மகனிடம், அம்மா மகளிடம் நேரிடையாகப் பேசுவதைக் காட்டிலும், தொலைபேசி மற்றும் செல்போனில் இருந்துதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.                ஒரு வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல்:- தந்தை:             உன்னைத் தவமிருந்து பெத்தேன்டா? மகன்:               உங்களை யாரு பெறச் சொன்னா? நாங்க என்ன அப்ளிகேசனா     போட்டோம்? தந்தை:...

இராமச்சந்திரன் என்றாலே வெற்றிதான் (டி.ஆர்.இராமச்சந்திரன்)

படம்
              தமிழ்த்திரைப்பட உலகில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி, பின்னர் காமெடியன் வேடம், குணச்சித்திர வேடம் எனப் பலவேடங்களில்ஜொலித்தவர்   டி.ஆர்.இராமச்சந்திரன் .   ‘சபாபதி’     படத்தில் காமெடி கலந்த கதாநாயகனாக இவர் அறிமுகமாகிப் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகக் கதாநாயகனை அப்படியே கண்முன் கொண்டுவந்து திரையில் நிறுத்தினார் டி.ஆர்.இராமச்சந்திரன்.      இதேபோல் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த பிற்காலத்தில் லேடி சூப்பர்ஸ்டாராகவும் மிகச்சிறந்த பரதநாட்டியக் கலைஞராகவும் விளங்கிய  வைஜெயந்தி மாலாவுடன்  இவர்  ‘வாழ்க்கை’  படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படமும் பெருவெற்றியைப் பெற்றது.    வழக்கமாகக் கதாநாயகனின் தோழனாக ஒரு காமெடி நடிகர் வருவார். ஆனால்  ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’  என்ற படத்தில் டி.ஆர்.இராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க அவருக்குக் காமெடி நண்பனாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார் என்பது ஆச்சர்யமான செய்தி. பலபடங்களில் கதாநாயகனாக நடித்த இவர், தனக்கு ஏற்ற நகைச்சுவைக் கதைகளைத் தயாரித்...

விரல் நுனியில் உலகம்….

படம்
                மனிதகுல வரலாற்றில் மொழி எவ்வளவு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறதோ அதுபோல, எழுத்தும் அத்தகைய பெருமையுடையதாகவே விளங்குகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனிமொழி இருப்பதுபோல, எழுத்தும் அமைந்திருப்பது ஒரு சிறப்பு. பண்டைய காலத்தில் எழுத்துக்கள் களிமண் பலகைகளிலும், மரப்பலகைகளிலும் எழுதப்பட்டும் செதுக்கப்பட்டும் வந்தன.   பின்னர் கல்வெட்டுகளாய், தாமிரப்பட்டயங்களாய், முடிவில்  பனைஓலைகளிலும் எழுத்துக்கள் எழுதப்பட்டு வந்தன.                பதினைந்தாம் நூற்றாண்டுகளில் அச்சுக்கலை தோன்றியபிறகு, எழுத்து, எளிமையாயிற்று. ஓலைகளிலும், தாள்களிலும், எழுத்தாணி மற்றும் மயிலிறகால் எழுதிக்கொண்டிருந்தவர்கள் அச்சுவடிவம் வந்தபிறகு, எழுத்துக்களை அச்சிடத் தொடங்கினார்கள். நூல்கள் வெளிவரத்தொடங்கின. இந்தவளர்ச்சியில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது தட்டச்சு இயந்திரம்.      தட்டச்சு இயந்திரத்தில் உள்ள எழுத்துக்களை நாம் விரல்களில் அழுத்தும்போது அவை தாள்களில் பதிவாகத...

விவேகானந்தரைச் சந்தித்த டெஸ்லா

படம்
    2003ஆம் ஆண்டு முதல் நான் அமெரிக்காவுக்குச் செல்லுகிறபோதெல்லாம் தமிழ்ச்சங்கங்களில் பேசுவதோடு, அந்த நகரில் வாழ்ந்த மிகச்சிறந்த உலகப்புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களின், எழுத்தாளர்களின், கவிஞர்களின் அறிவியல் கூடங்களுக்கும், நூலகங்களுக்கும் அப்பெருமக்கள் வாழ்ந்த வீடுகளுக்கும் சென்று பார்த்து வருவது வழக்கம். ஃபிலடெல்பியாவில்   புதுக்கவிதையின் பிதாமகர் வால்ட் விட்மனின்   வீட்டிற்கும் அவரது சமாதிக்கும் சென்று வந்திருக்கின்றேன். நியூஜெர்சிக்கு அருகில் ‘எடிசன்’ என்ற ஊரில்   தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வுக் கூடத்திற்குப் பலமுறை சென்று வந்திருக்கிறேன்.        அதே நியூஜெர்சி நகரில் ஒருமுறை  ஐன்ஸ்டின்  வாழ்ந்த வீட்டிற்கும் என்னை அழைத்துச் சென்றார்கள். இப்படி நான் சென்றுவருவதையெல்லாம் பார்த்து மகிழ்ந்த என் நண்பர்  திரு. ராஜா இளங்கோவன்  அவர்கள், ‘இதே நியூஜெர்ஸியில் வாழ்ந்த மற்றொரு அறிஞரான டெஸ்லா அவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றிய அரிய விஷயங்களையெல்லாம் திரு.ராஜா அவர்கள்சொல்லச் சொல...

எம்.கே.ராதா முதல் எம்.ஆர். ராதா வரை…சி.எஸ்.ஜெயராமன்

படம்
             தமிழ்த்திரையுலகில் இசைக்கு என ஒரு காலம் இருந்தது. பாடத்தெரிந்தவர்களே நடிகர்களாக, சூப்பர் ஸ்டார்களாகப் புகழ்பெற்று விளங்கினர். அதிலும் குறிப்பாக சாஸ்திரிய சங்கீதம் தெரிந்தவர்களுக்கே முன்னணியில் இடம் கிடைத்தது. திரையில் பாடகர்களே நடிகர்களானார்கள். அதனால் ஆரம்பகாலங்களில் ஒரு திரைப்படத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெற்றதாக அந்தக்காலப் பாட்டுப்புத்தகங்கள் கூறுகின்றன.       இவ்வாறு பாடத்தெரிந்த நடிகராக அறிமுகமாகிக் கதாநாயகனாகப், பின்னர் இசையமைப்பாளராக அதன்பின்னே பின்னணிப்பாடகராக மட்டும் தன்னை நிலைநிறுத்திப் புகழ்பெற்ற ஒருவர்  திரு. சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன்  என்கின்ற  சி.எஸ் ஜெயராமன்  ஆவார்.          இவருடைய குரல் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது (unique voice)   எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யூ சின்னப்பாவுக்குப்  பிறகுத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த  எம்.கே.ராதா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ...