டைனிங் டேபிளில் சாப்பிட்ட குரங்கு…
“ வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்று சொல்வார்கள். இவை பொய்யில்லை. மிகையுமில்லை. வெவ்வேறு அளவில் மனஅழுத்தங்கள் இன்றைக்கு அதிகரிக்கின்றன. இளைஞர்களில் பலருக்கும் மன அழுத்தங்கள் இருக்கின்றன. சிரிக்கத் தெரிந்தால் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கலாம். வெளிநாட்டில் ஆபரேஷனுக்கு முன்பு ஒருவருக்கு மயக்க மருந்து கொடுக்கப் போனார்கள். அவர் மறுத்துவிட்டு ‘வேண்டாம்… சார்லி சாப்ளின் படத்தைப் போடுங்கள் போதும்’ என்றிருக்கிறார். அதன்பிறகு ஆபரேஷன் நடந்திருக்கிறது. நகைச்சுவையின் வலிமை அது. கேன்சராலோ, எய்ட்ஸாலோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முன்னால் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பபூன்’ போல வேஷம் போட்டு வித்தைகள் காட்டியபோது, அந்தக் குழந்தைகள் அப்படியொரு சிரிப்புச் சிரித்தார்களாம். ...