சிலேடை விருந்து
தமிழ்மொழிக்கு இனிமை தருவன உவமை, உருவகம், சொல்லடுக்கு, சந்தப்பாக்கள், உயர்வு நவிற்சி, சிலேடை என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு மொழியும் இவ்வாறு தனக்கெனத் தனிச்சிறப்பைப் பெற்று விளங்கத்தான் செய்யும். தமிழில் ‘இரட்டுற மொழிதல்’ அல்லது ‘சிலேடை’ என்பது கேட்டுக் கொண்டிருப்பவர்களை, வாசிப்பவர்களைத் தன் வயப்படுத்தும் தன்மை உடையது எனச் சொல்லலாம். இச்சிலேடை, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். இதில் செம்மொழிச் சிலேடை கற்றவர்க்கு மட்டும் எளிதில் விளங்குவது, மற்றது கல்லாதவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு தெளிவாய் அமைவது. ஒருசொல், இருபொருள் தருமாறு வருவதே இரட்டுற மொழிதலாகும். மேடைக்கலையில் வல்லவர்களான கி.வா.ஜெகந்நாதன், கிருபானந்த வாரியார் போன்றோருடைய பேச்சில் மிகச் சரளமாகச் சிலேடைச் சொற்கள் புகுந்துவரும். ஒருமுறை கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்னையிலிருந்து கிளம்பி அதிகாலை நேரத்தில் தான் பேசவேண்டிய ஊருக்கு வந்து சேர்ந்தார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க வந்தவர்கள், அழகிய பூமாலை ஒன்றை அவருக்கு அணிவித்...