இடுகைகள்

Manikarnika லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜான்சி ராணி லட்சுமிபாய்…

படம்
ராணி லட்சுமி பாய் அவர்கள், இந்தியாவில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான   ‘ஜான்சியின்’  ராணியாக இருந்தவர். இவர் 1857இல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்தவர் ராணி லட்சுமிபாய் அவர்கள்.  ராணி லட்சுமிபாய் அவர்கள், 1828ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி காசியில் (இப்போதைய வாரணாசி) ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார்.  அவரது குழந்தைப் பருவத்தில் அவரை  ‘மணிகர்ணிகா’  என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பள்ளிப்பருவத்திலேயே  லட்சுமிபாய்   அவர்கள்  குதிரை  ஏற்றம்,  துப்பாக்கி  சுடுதல்,  கத்தி  சண்டை  போன்ற  தற்காப்புக்  கலைகளை  முறையாகப்    பயிற்சி  மேற்கொண்டார். 1842ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த  ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’  என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்குப் பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. 1853இல் மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால...