ஹாலிவுட்டின் கனவு இயக்குநர்… ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் உலகப் புகழ்பெற்ற ஆங்கிலத் திரைப்படங்கள் மதுரையில் திரையிடப்படும்போதெல்லாம் மறக்காமல் சென்று பார்த்துவிடுவேன். (ரீகல் தியேட்டர், பரமேஸ்வரி தியேட்டர்) டென் கமாண்மெண்ட்ஸ் (The Ten Commandments) மெக்கனாஸ் கோல்டு (Mackenna’s Gold), கிளியோபட்ரா (Cleopatra) போன்ற படங்களையும், ஜேம்ஸ்பாண்ட் படங்களையும், லாரல், ஹார்டி சார்ளி சாப்ளின் போன்ற நகைச்சுவையாளர்களின் படங்களையும் விடாமல் தொடர்ந்து பார்த்து வருவேன். மதுரையில் ஜேம்ஸ்பாண்ட் நடிகரான ஷான் கானரிக்கு (Sean Connery) ரசிகர் மன்றமே உண்டு. இப்படிப்பட்ட படங்களைப் பார்த்துவிட்டுக் கடைசி இரயிலில் ஊருக்குச் சென்று அதைப் பலநாட்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி. இத்தனைக்கும் அந்தப் படங்களெல்லாம் ஆங்கிலமொழியில் பேசினாலும், எனக்கு மொழி புரியாவிட்டாலும் நான் அதை புரிந்துகொள்வேன். மற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். இப்படி இருந்தபோதுதான் மதுரை சினிப்பிரியாவில் 70mm திரையரங்கில் திரையிடப்பட்ட படம் close Encounters of third kind என்னும...