கிராமத்து இராத்திரிகள்
நான் சொல்லப்போவது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது. அப்போது எனக்குப் பத்து வயது. எங்க அப்பாவுக்கு கிராமத்திற்கு மாற்றலாகி, அந்தப் பெரிய தெருவிற்கு அப்போதுதான் குடி வந்திருந்தோம். தெருப்பையன்கள் எல்லோரும் என்னை ஒரு வினோதப் பொருளாகப் பார்த்தார்கள். பக்கத்திலேயே பள்ளிக்கூடம். நான் முதன்முதலாக அப்பள்ளிக்கூடம் போனபோது மீசை தாடி, நீண்ட முடியோடு ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். யாரோ சாமியார் என்று நினைத்தேன். அவர்தான் தலைமை ஆசிரியர். என்னைப் பார்த்ததும்…. “ஏண்டா நேத்து வர்லே? மண்டிக்கால் போடு” சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார். எனக்குப் பயத்தில் தொண்டை அடைத்தது. முழங்கால் போட்டேன். ‘இவன் இன்னிக்குத்தான் சார் சேர்ந்திருக்கான்’ ஒருவன் கத்தினான். ஹும் சர...