மனிதக் கணினி செய்குத்தம்பி பாவலர்…
'அவதானம்’ என்பது ஒரே நேரத்தில் பல செயல்களை ‘ அவதானித்தல்’ எனப் பொருள்படும். எட்டுவேலைகளை ஒரே நேரத்தில் செய்கின்ற ஆற்றலுடையவரை ‘ அ ஷ் டாவதானி’ என்றும், பத்து வேலைகளைச் செய்பவரை ‘ தசாவதானி’ என்றும், பதினாறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவரை ‘ சோட ஷ அவதானி’ என்றும் அழைப்பது வழக்கம். இந்த ‘ அவதானி’ என்ற வடசொல்லுக்குத் தமிழில் ‘ கவனகர்’ என்று பொருள். இதேபோல, நூறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவர்களை ‘ சதாவதானி’ என அழைப்பார்கள். அத்தகைய சதாவதானிகளில் ஒருவர்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர் . இவர் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலைப் பெற்றதோடு ஏக சந்தக் கிராதியாகவும் திகழ்ந்தார். ‘ ஏக சந்தக் கிராதி’ என்ற வடசொல்லுக்குப் பொருள் ஒருமுறை ஒரு சொல்லைச் சொன்னால் அதனை அப்படியே உள்வாங்கிக்கொண்டு திரும்பச் சொல்லுகிற திறமை. அத்திறமை உள்ளவர்களை ‘ ஏக சந்தக் கிராதி’ என அழைப்பது வழக்கம். சதாவதானி செய்குத்தம்பி பா...