உலகத் தொலைக்காட்சியும் நீங்களும்…
தொலைக்காட்சி 20ஆம் 21ஆம் நூற்றாண்டுகளின் அறிவியல் அதிசயம். இத்தகைய தொலைக்காட்சிகள் இன்றைய சூழலில் தவிர்க்கமுடியாத சற்றே மனிதர்களின் அன்றாடப் பணிகளைத் தடைசெய்யும் விதத்திலும்கூட இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆயினும், இதனைப் பயன்படுத்துவோர் அன்னப்பறவைபோல தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நேரத்தை வீணடிக்காமல் இத்தொலைக்காட்சியைப் பயன்படுத்தலாம். தொலைக்காட்சியின் பயன்பாடு என்று வருகிறபோது, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் இதன் மூலமாகப் புதுமை பெறுகின்றன. விளையாட்டு, சுற்றுலா, கோவில் நிகழ்வுகள், இதுவரை நாம் விண்ணிலும், மண்ணிலும், கடல் ஆழத்திலும் கண்டிராத அரிய காட்சிகளை வீட்டுக்குள்ளேயே இருந்து காணுகிற வாய்ப்பினையும் தொலைக்காட்சி வழங்கி வருகிறது. இத்தொலைக்காட்சியால் வயதானவர்கள், நோயுற்றவர்கள் ஆகியோருடைய பொழுதுகள்கூட பயனோடு கழிகின்றன. என்னைப் பொறுத்தமட்டில் 1995 முதல் தொலைக...