இடுகைகள்

மே 15, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேட்கப்படாத கேள்விகள்… சொல்லப்படாத பதில்கள்…

படம்
    என்னப்பா… சவுக்கியமா?’ என்று யாரையும் பார்த்ததும் நாம் பேசத்துவங்குவது ஒரு கேள்வியிலிருந்துதான்.                கேள்வி கேட்கும் மரபு வேதகாலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. அது புராணங்களிலும் இருக்கிறது. கேள்வி – பதில் பகுதியிருந்தால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கேள்வி கேட்டால் தலை வெடித்து விடும் என்றும் சொல்லிப் பயமுறுத்துவார்கள்.                விக்கிரமாதித்தன் கதைகளில் மரத்தில் தொங்கும் வேதாளம்கூடக் கேள்வி கேட்கும். மகாபாரதத்தில் குருேஷத்திர யுத்தத்திற்கு முன்பு, கிருஷ்ணரிடம் அர்ஜுனன் கேட்கிற கேள்வியும் பதிலும்தானே பகவத்கீதை.                வில்லிபாரதத்தில் நச்சுப் பொய்கைச் சருக்கத்தில் ‘கேள்வி – பதில்’ பகுதி அவ்வளவு அருமையாக இருக்கும். அதில் ஒரு கேள்வி வரும். ‘உலகத்திலேயே வேகமானது எது?’ இதற்கு  ‘ மனம்’  என்று பதில் சொல்வான் தர்மன். அது போலவே...