இடுகைகள்

டிசம்பர் 22, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

படம்
  “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்”                                                                         – பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் என்ற சிற்றூரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். தேவர் அவர்கள் ஆன்மிகவாதியாகவும், சாதிபாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரையே சாரும். 1927ஆம் ஆண்டு சென்னை சென்ற தேவர் அவர்கள் பிரபல காங்கிரஸ் பிரமுகரும், முன்னணி வழக்கறிஞருமான சீனிவாசனைச் சந்தித்தார். அப்போது அவர் சென்னையில் நடந்து கொண்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் காரியக் கூட்டத்திற்கு தேவர் அவர்களை அழைத்துச் சென்றார். அக்கூட்டத்தில் வழக்கற...

நான்கு தலைமுறைக் கவிஞர்…

படம்
கவிஞர் வாலி அவர்கள் புகழ்மிக்க திரைப்படப் பாடலாசிரியர். இவர் கவிஞராக மட்டுமல்லாமல் திரைப்பட வசனகர்த்தாவாகவும், நடிகராகவும்  புதுக்கவிதையில் காவியங்களைப் படைப்பவராகவும் (அவதார புருஷன், கிருஷ்ணவிஜயம், பாண்டவர் பூமி) திகழ்ந்தார். இவர் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம்தேதி திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் பிறந்தார்இவரின் இயற்பெயர்  டி.எஸ். ரங்கராஜன். ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ என்ற தொடரும், ‘புதிய பார்வை’ இதழில் ‘நானும் இந்த  நூற்றாண்டும்’ என்ற தொடரும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.  கவிஞர் வாலி அவர்கள் 15,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை  எழுதியுள்ளார். இவைதவிர, ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே  உனை மறவேன்’ எனும் இவரது தொடக்கக் காலப்பாடல் இவரது முருகபக்தியை  உலகத்திற்கு அறிவித்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றோரை அடுத்து அதிகப் பாடல்களை எழுதியவர் இவரே.இத்தகைய பெருமைமிகுந்த கவிஞரைப் பாராட்டுகிற வாய்ப்பு எனக்கும் கிடைத...