இடுகைகள்

நாடக உலகின் ஆசான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாடக உலகின் ஆசான்…

படம்
  120ஆண்டுகளுக்கு முன்னால் இது நிகழ்ந்தது. தற்போதைய   விருதுநகர்  மாவட்டம்  மல்லாங்கிணறு   என்கின்ற ஊரில் ஒரு நாடகம் இரவு பத்து மணிக்கு தொடங்க இருக்கிறது. நாடகம் தொடங்குவதற்கான அதிர்வேட்டு போட்டவுடன் ஊர் மக்கள் அனைவரும் தரையில் வந்து அமர்ந்து நாடகத்தை இரசிக்கத் தொடங்கினார்கள்.   சத்தியவான்  சாவித்திரி   நாடகத்தில்   எமதர்மன்   உள்ளே நுழைந்தபோது அவருடைய உருவத்தையும், ஆர்ப்பாட்டமான நடிப்பையும் அதிர்ந்த இசையையும் கேட்டுக் குழந்தைகள் நடுங்கினர். ஒரு கர்ப்பிணிப்பெண் பாதிப்படைந்தாள்.      இவற்றையெல்லாம் மறுநாள் கேள்விப்பட்ட எமதர்ம வேடமிட்ட அந்த நடிகர் அடுத்த ஊர்களில் நாடகம் நடக்கும்போது தெருவில் தமுக்கு அடிக்கச் சொன்னாராம். ‘நாடகத்தில் எமதர்மன் வருகின்ற காட்சி வருகிறபோது குழந்தைகள் கர்ப்பிணிப்பெண்கள் மனஅச்சம் உள்ளவர்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்’ என்று. அந்த வேடத்தில் நடித்தவர்தான்  நாடக உலகின் ஆசான்  என்றும்  தெருக்கூத்துக் கலையை நாடகக் கலையாக மாற்றிய   நாடக உலகின் தந்தை  என்றும் அழைக்கப்படுகின்ற  தவ...