அல்லவை போக்கி, நல்லவை ஏற்போம்… போகிப்பண்டிகை
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” நன்னூல் – பவணந்தி முனிவர். தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி, பங்குனி வரையில் பனிரெண்டு மாதங்களை ஆறுபருவங்களாக நம்முடைய முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். இதற்குப் ‘பெரும்பொழுது’ எனப் பெயரிட்டுள்ளனர். இதேபோல, ஒருநாளின் பொழுதுகளை ஆறுபகுதிகளாகப் பிரித்து அதனைச் ‘சிறுபொழுது’ எனவும் வகுத்துள்ளனர். பெரும்பொழுது எனப் பார்க்கும்பொழுது:- சித்திரை வைகாசி – இளவேனில் ஆனி ஆடி ...