பயிருக்கும் உயிர் உண்டு…. ஜெகதீஸ் சந்திரபோஸ்
ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்கள் இயற்பியல் மற்றும் தாவரவியல் ஆய்வாளர். வானொலியைக் கண்டுபிடிக்க மார்கோனி இலண்டன் மாநகரித்தில் முயன்று கொண்டிருந்த காலத்திலேயே அதுபற்றிச் சிந்தித்து அந்த ஆய்வு முடிவையும் வெளியிட்டார் ஜெகதீஸ் சந்திர போஸ். அப்போது மார்கோனி அவர்கள் ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதினாராம். அக்கடிதத்தில் ‘வானொலியைக் கண்டுபிடிக்கும் இம்முயற்சியில் கடும் உழைப்புடன் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் தாங்கள் அதற்கு உதவவேண்டும்’ என்று திரு.போஸ் அவர்களைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜெகதீஸ் சந்திர போஸ் மிகுந்த பெருந்தன்மையோடு தன் கண்டுபிடிப்பை அவருக்கு விட்டுக்கொடுத்தார். இதை அக்காலப் பத்திரிக்கைச் செய்திகள் உறுதிசெய்கின்றன. இதனாலேயே மார்கோனி அவர்களுக்கு 1909ஆம் ஆண்டு வானொலி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு கிடைத்தது. பின்னர் போஸ் அவர்கள் தாவரவியல் குறித்த ஆராய்ச்சியில் தன்னுடைய செயல்பாடுகளை மாற்றிக்கொண்டார். தாவரங்கள் தன்னை நேசிப்பவர்களைக் கண்டால் மகிழ்ச்சி அடைவதும், தன்னைத் துன்புறுத்துபவர்களைக் கண்டால் சோர்ந்து பயந்துவிடும் என்பதை மெல்லிய ...