தமிழ்போன்ற இளங்குமரனார்…
தமிழ் இலக்கண இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுத்த சான்றோர் பலரைப் பற்றி படித்திருக்கிறோம். அத்தகைய பெருமக்களுள் ஒருவரோடு வாழ்ந்த காலத்தை எண்ணி மகிழ்கிறோம். ஆம், சமீபத்தில் நம்மைவிட்டு மறைந்த திரு. இரா. இளங்குமரனார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குக் கிடைத்தப் பெருமை. மதுரை அருகே அமைந்துள்ள திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியில் அவர் பணிபுரிந்த காலத்தில் என் தந்தையார் புலவர் கு. குருநாதன் அவர்களுக்கு நெருங்கிய நண்பராய்த் திகழ்ந்தார். நான் பள்ளியில் படிக்கிற காலங்களிலேயே அவரின் அருந்தமிழைக் கேட்டு வியந்திருக்கிறேன். திரு. வி. கல்யாணசுந்தரனார், மறைமலையடிகள், பேரறிஞர் அண்ணா, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கலைஞர் கருணாநிதி போன்றோரின் எழுத்துநடையும், பேச்சுநடையும் அழகுமிகு இலக்கியத் தமிழிலேயே அமைந்திருக்கும். அவர்களைப்போன்றே எழுத்துநடையும், பேச்சுநடையும் கொண்டவர் நம் இளங்குமரனார் அவர்கள். 1983ஆம் ஆண்டில் நான் இளங்கலை (எம்.ஃபில்.,) பட்டம் ...