நீரே…. தெய்வம்….!
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.” என்பது வள்ளுவர் வாக்கு. இந்த உலகம் நீரால் சூழப்பட்டது. முந்நீராகிய உப்புக் கடல்நீரும், நன்னீராகிய குடிநீராரும்தான் இந்த உலகத்து உயிர்களை வாழ வைக்கின்றன. கடல்நீர் முக்கால் பகுதி பூமியிலிருந்தாலும், குடிநீராகிய நன்னீர் இருந்தால்தான் மனிதர்களும், மற்ற உயிர்களும் தாவரங்களும் வாழமுடியும். நன்னீரின் பெருமையைப் பற்றிக் கூறும்போது, மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்; உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா – கடல்பெரிது மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல் ...