இடுகைகள்

டெஸ்லா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவேகானந்தரைச் சந்தித்த டெஸ்லா

படம்
    2003ஆம் ஆண்டு முதல் நான் அமெரிக்காவுக்குச் செல்லுகிறபோதெல்லாம் தமிழ்ச்சங்கங்களில் பேசுவதோடு, அந்த நகரில் வாழ்ந்த மிகச்சிறந்த உலகப்புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களின், எழுத்தாளர்களின், கவிஞர்களின் அறிவியல் கூடங்களுக்கும், நூலகங்களுக்கும் அப்பெருமக்கள் வாழ்ந்த வீடுகளுக்கும் சென்று பார்த்து வருவது வழக்கம். ஃபிலடெல்பியாவில்   புதுக்கவிதையின் பிதாமகர் வால்ட் விட்மனின்   வீட்டிற்கும் அவரது சமாதிக்கும் சென்று வந்திருக்கின்றேன். நியூஜெர்சிக்கு அருகில் ‘எடிசன்’ என்ற ஊரில்   தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வுக் கூடத்திற்குப் பலமுறை சென்று வந்திருக்கிறேன்.        அதே நியூஜெர்சி நகரில் ஒருமுறை  ஐன்ஸ்டின்  வாழ்ந்த வீட்டிற்கும் என்னை அழைத்துச் சென்றார்கள். இப்படி நான் சென்றுவருவதையெல்லாம் பார்த்து மகிழ்ந்த என் நண்பர்  திரு. ராஜா இளங்கோவன்  அவர்கள், ‘இதே நியூஜெர்ஸியில் வாழ்ந்த மற்றொரு அறிஞரான டெஸ்லா அவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றிய அரிய விஷயங்களையெல்லாம் திரு.ராஜா அவர்கள்சொல்லச் சொல...