ஆட்சியில் பொன்விழா கண்டவர்… ஃபிடல் காஸ்ட்ரோ
கியூபப் புரட்சியின் தந்தையும், பொதுவுடைமைப் புரட்சியாளரும், பொதுவுடைமை அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49ஆண்டுகள் கியூபாவை ஆண்டவர். உலகத்தில் நீண்ட காலத்துக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் பிடல் காஸ்ட்ரோ மட்டுமே. ஃபிடல் காஸ்ட்ரோ, 1940களில் ஹவானா பல்கலைக்கழகத்தில் படித்தபோது அரசியலில் ஈடுபடத் தொடங்கியதுடன் தனது பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொண்டார். பல்கலைக்கழக மாணவரான ஃபிடல் காஸ்ட்ரோ 1946இல் அப்போதைய கியூபா அதிபர் ராமோன் கராவ் சான் மார்ட்டின் அரசின் ஊழலுக்கு எதிராக நிகழ்த்திய உரை அப்போது மிகவும் பிரபலமானது. கல்லூரியில் பயிலும்போதே கம்யூனிச கட்சிகளில் சேர்ந்தார். போராட்டங்களும் செய்தார். பேச்சுத்திறமையால் ஃபிடல் காஸ்ட்ரோ மக்களைக்கவர்ந்தார். ‘ கியூபாவுக்குச் சொந்தமான எல்லா வளங்களும் கியூபா மக்களுக்கே சொந்தம். வேறு எந்த ஏ...