இடுகைகள்

மருதகாசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரைக்கவித் திலகம்… மருதகாசி

படம்
  தமிழ்த்திரையிசை உலகில் தனக்கென ஒரு தனித்தடம் பதித்தவர்   கவிஞர்  மருதகாசி.   இவருடைய புகழ்மிக்கப் பாடல்களை இன்றைய தலைமுறையினர் பலர் அறியமாட்டார்கள்.     ‘ வண்ணக்கிளி’   படத்தில் வருகின்ற   ‘ சித்தாடை  கட்டிக்கிட்டு’   என்ற பாடலும்,   ‘ குமுதம்’   படத்தில் வரக்கூடிய ‘ மாமா  மாமா  மாமா….’  என்ற பாடலும் குறிப்பிடத்தகுந்தன. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இவர் எழுதிய பல பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினுடைய பாடல்களோ என்று எண்ணத் தோன்றும்.  ‘ ரம்பையின்  காதல்’  படத்தில் வரக்கூடிய புகழ்பெற்ற தத்துவப்பாடலான  ‘ சமரசம்  உலாவும்  இடமே.’  என்ற பாடல் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.  ‘ அலிபாபாவும் 40 திருடர்களும்’  படத்திலும் இவருடைய பாடல்கள் மக்கள் மனதைக் கவர்ந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இவர்  ‘ விவசாயி’  படத்தில் எழுதிய, ‘விவசாயி… விவசாயி… கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி… என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டி...