திரைக்கவித் திலகம்… மருதகாசி
தமிழ்த்திரையிசை உலகில் தனக்கென ஒரு தனித்தடம் பதித்தவர் கவிஞர் மருதகாசி. இவருடைய புகழ்மிக்கப் பாடல்களை இன்றைய தலைமுறையினர் பலர் அறியமாட்டார்கள். ‘ வண்ணக்கிளி’ படத்தில் வருகின்ற ‘ சித்தாடை கட்டிக்கிட்டு’ என்ற பாடலும், ‘ குமுதம்’ படத்தில் வரக்கூடிய ‘ மாமா மாமா மாமா….’ என்ற பாடலும் குறிப்பிடத்தகுந்தன. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இவர் எழுதிய பல பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினுடைய பாடல்களோ என்று எண்ணத் தோன்றும். ‘ ரம்பையின் காதல்’ படத்தில் வரக்கூடிய புகழ்பெற்ற தத்துவப்பாடலான ‘ சமரசம் உலாவும் இடமே.’ என்ற பாடல் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. ‘ அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்திலும் இவருடைய பாடல்கள் மக்கள் மனதைக் கவர்ந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இவர் ‘ விவசாயி’ படத்தில் எழுதிய, ‘விவசாயி… விவசாயி… கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி… என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டி...