கடித இலக்கியங்கள்
கடிதம், தபால், அஞ்சல் இப்படிப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்ற கடிதப் போக்குவரத்துகள், மனிதர்களுக்கு இடையேயான தொடர்பு மூலங்கள் என்று சொல்லலாம். காதல் கடிதங்கள், அழைப்புக் கடிதங்கள், அரசியல் தொடர்பான கடிதங்கள், உறவுமுறைக் கடிதங்கள் என்று இதனை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். தொலைபேசி வந்தபிறகு, குறிப்பாகச், செல்போன்கள் வந்தபிறகு கடிதம் எழுதுகிற முறை அருகிப் போனது. எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் தொலைபேசியிலும், செல்போனிலும் பேசப் பழகிக் கொண்ட நாம், எழுதத் தயங்குவது இயற்கைதான். நண்பர் ஒருவர் தொடர்ந்து கடிதம் எழுதிக்கிட்டே இருப்பார். அதுல கடைசி வரியில், ‘இந்தக் கடிதம் க...