இடுகைகள்

மார்ச் 23, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலத்தை வென்ற வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ்.

படம்
       இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் பெயர் பெற்றது பாண்டியர்கள் அரசாண்ட தென்பாண்டி மண்டலத்தின் தலைநகராகிய மதுரை.     இம்மதுரையில் இசையை வளர்த்தெடுக்கவே இசைக்கு இடையூறு ஏற்பட்டபோது அதனை மாற்றிக்காட்டவே எம்பெருமானாகிய சொக்கநாதப்பெருமான் பலமுறை மதுரைக்கு வந்து மதுரையில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். தங்கள் குரலால் பெருமைபெற்ற  மதுரை மணி ஐயர், மதுரை சண்முக வடிவு சுப்புலெட்சுமி (எம்.எஸ்.சுப்புலெட்சுமி) மதுரை சோமு  போன்றோர் தங்களுடைய இன்குரலால் தமிழுக்கும் தமிழிசைக்கும் பெருமை சேர்த்தனர்.       என்.பி.என்.சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்கள்  தங்கள் விரலால் நாதஸ்வரத்தால் இசைக்கு மெருகூட்டினர்.  சங்கரதாஸ் சுவாமிகள்  போன்றவர்கள் நாடகக் கலைக்கு உயிரூட்டினர். இன்றைக்கும் மதுரையிலே சங்கரதாஸ் சுவாமி சிலையாக அமர்ந்து அரு௵ட்டுகின்றார். இத்தகைய பெருமைமிகுந்த மதுரை மாநகரின் பெருமைக்குத் தன் குரலால் பெருமை சேர்த்த கலைஞர்தான்  டி.எம்.சௌந்தரராஜன்  அவர்கள்.        அவரது...